ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.. தேவையான குடிநீரை சேமித்துக்கொள்ளுங்கள்.. 

தஞ்சாவூரில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.. தேவையான குடிநீரை சேமித்துக்கொள்ளுங்கள்.. 

மாதிரி படம்

மாதிரி படம்

Tanjore District News : தண்ணீர் குழாய் பழுதடைந்துள்ளதால் தஞ்சாவூரில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. எனவே, இப்பகுதி மக்கள் தேவையான குடிநீரை சேமித்துக்கொள்ளுங்கள்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளதால், அதனை சரிசெய்யும் பணி காரணமாக 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என்ற மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளதால் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சரி செய்யும் பணிகள் வருகிற 28ம் தேதி (திங்கள் கிழமை) முதல் 30ம் தேதி (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது.

எனவே 1வது வார்டு முதல் 51வது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் வருகிற 29ம் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 1ம் தேதி வரை 3 நாட்கள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது.

இதையும் படிங்க : தஞ்சை சுவாமி மலை முருகன் கோவிலில் கார்த்திகை திருவிழா - நிகழ்ச்சி நிரல்

எனவே, பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tanjore