ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை கோஆப்டெக்ஸில் பொங்கல் வரை அசத்தல் தள்ளுபடி ஆஃபர்கள்

தஞ்சை கோஆப்டெக்ஸில் பொங்கல் வரை அசத்தல் தள்ளுபடி ஆஃபர்கள்

தஞ்சை

தஞ்சை கோஆப்டெக்ஸ்

Thanjavur Co Optex | தஞ்சை கோ ஆப்டெக்ஸ்-ல் பண்டிகை சிறப்பு தள்ளுபடியுடன், பொதுமக்களுக்கு பயண்படும் வகையில் சிறப்பு சலுகைகளையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர இரகங்கள் உற்பத்தி செய்து தனது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க:  247 தமிழ் எழுத்துக்களால் சிவனுக்கு எழுப்பப்பட்டதா தஞ்சை பெரிய கோவில்..? ஆச்சரியப்படவைக்கும் ராஜராஜ சோழனின் தமிழ் பற்று பற்றிய கதைகள்...

இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம். சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ். மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:  குழந்தை பாக்கியம் பெற, கர்ப்பத்தை காக்க தஞ்சையில் முக்கிய கோவில் - கர்ப்பரட்சாம்பிகையின் சிறப்புகள்..

மேலும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம், கனவு நனவு திட்டம் " என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு. 11 வது மற்றும் 12 வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி. மொத்த முதிர்வு தொகைக்கு தேனைப்படும் துணிகளை 20% அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இது குறித்து தஞ்சை கோ ஆப்டெக்ஸ் நிறுவன மேலாளர் கூறுகையில், “கடந்த தீபாவளி 2021 பண்டிகை காலத்தில் தஞ்சாவூர் மண்டலத்தில் ரூ.749.15  லட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2022க்கு ரூ.1.300.00  லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நெசவாளர்களின் கைதேர்ந்த வகையில் நெய்யப்படும்..பட்டு புடவைகள் மற்றும் துணிகளை தள்ளுபடி விலை மற்றும் கனவு நனவு திட்டத்தையும் பொதுமக்கள் பயண்படுத்திகொள்ளுமாறு

கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur