ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு அளித்த அன்பான அன்பளிப்பு என்ன தெரியுமா?

தஞ்சையில் முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு அளித்த அன்பான அன்பளிப்பு என்ன தெரியுமா?

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Tanjore |16 ஆண்டுகளுக்கு பிறகு இனைந்த முன்னாள் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு அளித்த அன்பான நன்கொடை!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரி அமைந்துள்ளது. இதில் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2003-2006-ல் இக்கல்லூரியில் பயின்ற இயற்பியல் துறை மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிக்காக தற்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கியுள்ளனர்.

இதை அந்த பேட்ஜில் படித்த மாணவ, மாணவிகள் ஒன்றாக இணைந்து தான் படித்த கல்லூரிக்கா எதாவது செய்ய வேண்டும் என்ற ஆலோசனையில் தாங்கள் படித்த காலத்தில் தான் சுத்தமான குடிநீர் குடிக்க முடியவில்லை. தற்போது பயின்று வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக நல்ல குடிநீர் குடிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் ரூ.50000 மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கியுள்ளனர்.

குடிநீர் சுத்திகரிப்பான்

Also Read : மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,037 வது சதய விழா தொடக்கம்...

இந்நிகழ்வை முன்னாள் மானவர்கள் ஒரு மீட் அப்- ஆகவும் கல்லூரியில் ஆசிரியர்கள் முன்நிலையில் கலந்துரையாடி மகிழ்ச்சியான நிகழ்வாக நடத்தினர். இதில் பலர் பல ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கும் வாய்ப்பாவும் இருந்ததால் கடந்த கால நிகழ்வுகளை மகிழ்ச்சியாக உரையாடினார்.

இந்நிகழ்வு கல்லுரி ஆசிரியர், மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. மேலும் இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள், இன்னாள் மாணவர்களுக்கு துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை நெறிமுறைகளை போதித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இதுகுறித்து முன்னாள் மானவர்கள் கூறுகையில், “இது எங்களின் நீண்ட நாள் ஆசை. நாங்கள் படித்த கல்லூரிக்கா எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கியுள்ளோம். மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்று மாணவ, மாணவிகளுக்கும். கல்லூரிக்கும் தேவையான வசதிகளை எங்களால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செய்வோம்” என்று கூறினர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore