முகப்பு /தஞ்சாவூர் /

25 வருட இயற்கை விவசாயத்தால் கற்றுக்கொண்டது என்ன? - தஞ்சை விவசாயியின் அனுபவம்...

25 வருட இயற்கை விவசாயத்தால் கற்றுக்கொண்டது என்ன? - தஞ்சை விவசாயியின் அனுபவம்...

X
இயற்கை

இயற்கை விவசாயம் 

Thanjavur news | இயற்கை விவசாயத்தை நோக்கி பல விவசாயிகள் படையெடுக்க தொடங்கினாலும் இயற்கை  விவசாயத்தை  பற்றி பலர் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

  • 3-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

இந்நிலையில் இயற்கை விவசாயத்தில் புரிந்து கொள்ளக்கூடிய பல தகவல்களை தஞ்சை மாரியம்மன் கோயில் பகுதியில் சுமார் 25 ஏக்கரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் இயற்கை விவசாயம் செய்து வரும் சித்தரிடம் கேட்டறிந்தோம் இதுகுறித்து அவர் நம்மிடம் பகிர்ந்த பல தகவல்களை பின்வருமாறு காணலாம்.

இயற்கை விவசாயம்:- எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல்‌ இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இயற்கை உரங்களை தயாரித்து அதன் மூலம் செய்யப்படும் விவசாயமே இயற்கை விவசாயம்..இது மட்டுமல்ல இயற்கை விவசாயம். இதுவும் ஒன்று தான் ஆனால் முழுமையான பதில் இது கிடையாது இதில் நாம் புரிந்து கொள்ளக்கூடிய முக்கியமான ஒரு தகவல்கள் இருக்கிறது...

இயற்கை விவசாயம் ஏன் பேசுபொருளாக மாறி வருகிறது:- சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது... என்ன சுற்றுச்சூழல் சீர்கேடு என்றால் பல்லுயிர் பெருக்க அமைப்புகளில் தாவர உலகில் ஒரு சில வகைகளும் விளங்கினத்தில் ஒரு சில வகைகளும் கிட்டத்தட்ட தொடர்ந்து அழிந்து கொண்டே வருகிறது.

இது போன்ற நிறைய ஜீவன்கள் குறைவதாலும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும்.. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒரு விஷயம் இவற்றை பாதுகாப்பதற்கு இயற்கை விவசாயமே அடிப்படையானது..

உணவு தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யும்:-

நாம் எல்லோருக்கும் உணவு என்பது அவசியமான ஒன்று இந்த உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றால் இயற்கை விவசாயம் மட்டுமே அதைப் பூர்த்தி செய்யும்.. அது எப்படி? எங்களிடம் தான் அரிசி இருக்கே உணவு இருக்கே அரசு மாத மாதம் அரிசியும் தருகிறதே தட்டுப்பாடு இன்றி தான் கிடைக்கிறது என்றால், அரிசி கோதுமை மட்டும் உணவு கிடையாது.. சிறுதானியங்களும் உணவே.. இயற்கை விவசாயம் மட்டுமே ஊட்டச்சத்து நிறைந்த உணவு தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யும்..

இயற்கை விவசாயம்

அணைவரும் எளிதில் கிடைக்கும்:-

இயற்கை விவசாயம் ஊட்டச்சத்து இவை எல்லாம் சரிதான் ஆனால் இவை எல்லாம் நம்மால் வாங்க முடியுமா? என்றால் நிச்சயம்முடியும், உதாரணத்திற்கு ஒரு காலத்தில் சர்க்கரையின் விலை அதிகமாகவும் வெள்ளத்தின் விலை மிக குறைவாகவும் இருந்தது தற்போது எங்கும் சர்க்கரை ஆலைகள் விவசாயிகள் எங்கு பார்த்தாலும் கரும்பு பயிரிட்டு வரும் நிலையில் சர்க்கரை மிக எளிதில் கிடைக்கிறது விலை குறைவாகவும் இருக்கிறது.

வெள்ளம் அப்படி அல்ல சற்று விலை அதிகம் தான் உற்பத்தியின் அளவு அதிகரிக்கும் போது எளிய மக்களும் எளிதாக வாங்க முடியும். கண்டிப்பாக அப்படி ஒரு நிலை வரும்போது கருப்பு கவுனி அரிசி எல்லாம் 50 ரூபாய்க்கு எளிதாக கிடைத்துவிடும்... இலவசமாக கிடைக்க வேண்டுமென்றால் அது அரசின் கையில் மட்டுமே உள்ளது.. இவையெல்லாம் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நடக்கும் இந்த பூமியை இயற்கை விவசாயம் மீண்டும் ஆளும். தற்போது கூட ஒரு சில இடங்களில் 70 ரூபாய்க்கு இயற்கையாக விளைந்த அரிசி கிடைக்கிறது.

இயற்கை விவசாயம்

கால்நடைகளுக்கும் நன்மை:-

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, மலிவு விலை, இந்த வரிசையில் கால்நடைகளுக்கும் நன்மை பயக்கும் இயற்கையாக விளைந்த பிற்களோ, காய்ந்த வைக்கோலோ இவற்றில் அதிக அளவில் உயிர் நிறைகள் உள்ளது.

மேலும் படிக்க : திண்டுக்கல் அருகே ‘மினி கொடைக்கானல்’.. புத்துணர்ச்சி தரும் சிறுமலை ட்ரிப்..

இயற்கை விவசாயத்தில் மட்டுமே மனிதனுக்கு எந்த அளவில் நன்மை பயக்குமோ அதேபோல் கால்நடைகளும் அதை சாப்பிடும் போது முழுமையான சத்துக்கள் அதில் கிடைத்துவிடும்.

நோயை கட்டுப்படுத்தும் நாட்டு விதைகள்:-

(இயற்கை விவசாயத்தில் முக்கியமான இரண்டு மண்வளம், தண்ணீர்) பயிரிட தேர்ந்தெடுக்கும் விதைகள் நெல் மட்டுமல்ல பல வகைகள் மர வகை பயிர்கள்,பழ வகைகள் எது வேண்டுமானாலும் நாம் தேர்ந்தெடுக்கும் விதைகள் இயற்கையான நாட்டு விதைகளாக இருந்தால் அவைகளை நாம் தீனி போட்டு வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த பயிரே தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும்..

இயற்கை விவசாயம்

காட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்களையும் மண்ணில் இருக்கும் கரிமச்சத்துக்களையும் அதுவே தேடிச்சென்று சேர்த்துக் கொள்ளும். மேலும் முக்கியமாக பூச்சி தாக்குதல் மிக குறைவாக இருக்கும் உதாரணத்திற்கு பாரம்பரிய விதைகள் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் சுனைத்தன்மை அதிகமாக இருக்கும்.

முள்ளு போல் குத்துவது. நெல் பயிரிலேயே நிறைய சுனை தன்மை இருக்கும் கண்ணாடி சத்து என்று கூறுவார்கள்... இவையெல்லாம் தான் ஒரு நோயை, பூச்சியை கட்டுப்படுத்தக்கூடியது..

வறட்சியையும் தாங்கும் வெள்ளத்தையும் தாங்கும்:-

இயற்கை விவசாயத்தை பொறுத்தவரையில் மற்றொரு முக்கியமான செய்தி வறட்சியை தாங்கும். பயிருக்கு நீர் பற்றாக்குறை இருந்தால் தனக்கான நீரை அதுவே தேடி வேர் நீண்ட தூரம் உள்ளே செல்லும்.

மேலும் படிக்க : அசைவ பிரியர்கள் தேடி வரும் சங்கரன்கோவிலின் பழமையான சிவகாசி நாடார் மெஸ்ல சாப்பிட்டுருக்கீங்களா?

அதேபோல் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது அழுகியது போல் தெரியும் தண்ணீர் வடிந்த பிறகு சூரிய ஒளியை கண்டு மடமடவென வளர்ந்து விடும்... இது போன்ற பல தகவல்களை இயற்கை விவசாயத்தில் இருக்கிறது...

விவசாயம் விவசாயியையும் வாழவைக்கும் வாங்கும் நுகர்வோரையும் வாழ வைக்கும், வியாபாரிகளையும் வாழ வைக்கும், அடுத்த தலைமுறைக்கும் நீடித்த நிலைத்த வேளாண்மையையும், மண்வளத்தையும் அடுத்த தலைமுறைக்கு அப்படியே கொடுப்பதும் இயற்கை விவசாயமே... ஒட்டு மொத்தத்தில் இயற்கையை காப்பதற்கு இயற்கை விவசாயத்தால் மட்டுமே முடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Agriculture, Local News, Thanjavur