தமிழ்நாடு பட்ஜெட் 2023 நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் 2023-2024-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் நாளை (20ம் தேதி) தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்க்கும் திட்டங்கள் என்னவென்று கேட்டு அறிந்தோம். இதுகுறித்து தஞ்சை மாவட்ட விவசாய சங்கத்தினர் விடுத்த கோரிக்கைகளை பார்போம்.
பருவம் தவறி பெய்த மழை :
கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டம் மட்டுமன்றி அனைத்து மாவட்டங்களிலும் விவசாயத்தில் மிகுந்த சேதம் ஏற்பட்டது. ஆனால் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் தமிழக அரசு இழப்பீடு தொகையை அளித்தது ஆனால் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு எந்த ஒரு இழப்பீடு தொகையையும் தரவில்லை. குறிப்பாக நெல், உளுந்து, கடலை, வாழை போன்றவை பெரும் சேதமடைந்த நிலையில் எந்த ஒரு இழப்பீடு நிவாரணமோ அரசு அறிவிக்கவில்லை. இது விவசாயிகள் இடையே பெரும் வேதனை அளிக்கும் நிலையில் தற்போது பட்ஜெட் தாக்கல் நாளை (20ம் தேதி) நடக்க இருக்கிறது.
இதையும் படிங்க : மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் :
ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல் குவிண்டாலுக்கு நெல் குவின்டாலுக்கு ₹2500-ம் கரும்பு டன்- ₹4000 தருவதாகவும் அறிவித்தார். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் இன்னும் இந்த தொகையை தரவில்லை. எங்களுக்கு இந்த முழுத் தொகையை தற்போது தர இயலவில்லை என்றாலும் ஊக்கத் தொகையாக தற்போது இருக்கும் தொகையிலிருந்து கூடுதல் ₹500 ரூபாய் அளித்தால் நாங்கள் சற்றாவது நிம்மதி பெருமூச்சு விடுவோம். விவசாயிகளுக்கு பெரும் பலனாக அமையும். இது எங்களது முதல் கோரிக்கை.
ஒவ்வொரு 10 கிராமங்களுக்கும் உள்ளடக்கிய சிறுதானியங்களை சந்தைப்படுத்துவதற்கான தணி தணிமைய வசதியை ஏற்படுத்தி தரவேண்டும். மேலும் நெற்களை மதிப்பு கூட்டி விற்பதற்கு அந்தந்த மையத்தில் தொழிற்சாலைகளை அமைத்து தர வேண்டும்.
கூட்டுறவு கடனை கூட்ட வேண்டும் :
சிறுதானியம் செய்யும் விவசாயியாக இருந்தாலும் சரி நெல் சாகுபடி செய்யும் விவசாயியாக இருந்தாலும் சரி தற்போது வரை எத்தனை ஏக்கர் வைத்திருந்தாலும் ஒரு ஏக்கருக்கு மட்டுமே கூட்டுறவு கடனை அளிக்கின்றனர். ஆனால் அது எங்களுக்கு பெரிதளவிலும் உதவுவதில்லை. எனவே எத்தனை ஏக்கர் விவசாயம் நிலம் வைத்திருக்கிறார்களோ அதற்கு ஏற்ற கூட்டுறவு கடனை தர வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஆகவே இந்த பட்ஜெட்டில் ஆவது விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆதரவான பட்ஜெட்டாக இருக்கும் என நம்புகிறோம். இதுவே எங்களின் முக்கிய கோரிக்கையாகவும் இருக்கிறது என தஞ்சை மாவட்ட விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur, TN Budget 2023