ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் மாவட்டத்தில் மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

தஞ்சாவூர் மாவட்டத்தில் மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

மின் தடை

மின் தடை

Thanjavur District | தஞ்சை மாவட்டத்தில் நாளை (நவம்பர் 15) பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) பேராவூரணி, சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நாளை இந்த பகுதிகளில் மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரி செய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன்படி, நாளை கீழ் கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளா் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Must Read : தமிழ்நாட்டின் ஸ்பா - குற்றாலம் மெயின் அருவியின் சிறப்புகள் தெரியுமா?

மின் தடை ஏற்படும் இடங்கள்:

பேராவூரணி நகர், பெருமகளூர், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம், வாட்டாத்திக்கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டட் யங்காடு, மதன்பட்டவூா், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக்கோட்டை, கள்ளம்பட்டி , கழனிவாசல், பள்ளத்தூா், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur