Home /thanjavur /

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா? 

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா? 

மின்தடை அறிவிப்பு

மின்தடை அறிவிப்பு

Thanjavur Power Cut | தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (21-ந் தேதி புதன்கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஏடிஎம் மையத்தில் பெரியகோவில், தலையாட்டி பொம்மை ஓவியங்கள்...

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகையால், காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை ஏற்படுகிறது என்று ஒரத்தநாடு ஊரக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழரசி தகவல் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக் கோட்டை, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, உஞ்சியவிடுதி, காரியா விடுதி, கலியரான்விடுதி, சிவவிடுதி, பின்னையூர், சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர்குடிக்காடு, வடக்குகோட்டை, தெற்கு கோட்டை, திருநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Local News, Power cut, Thanjavur

அடுத்த செய்தி