Home /thanjavur /

தஞ்சாவூரில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

தஞ்சாவூரில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூர் மாவட்டம் வீரமரசன்பேட்டை, மணிமண்டபம் மின் நிலையங்களில் நாளை மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தஞ்சாவூர் மாவட்டம் வீரமரசன்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடைபெறவுள்ளது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 முதல் மாலை 5 மணி வரை வீரமரசன்பேட்டை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தகவலை தஞ்சை உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பூதலூர், செல்லப்பன்பேட்டை, மருதக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீரகண்டியன்பட்டி, வெண்டையம்பட்டி, நந்தவனப்பட்டி, அய்யனாபுரம், இந்தளூர், சோளகம்பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுரான்புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சசமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு, சித்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

    தஞ்சாவூர் மணிமண்டபம் பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பாலாஜிநகர், டி.பி.எஸ்.நகர், ராம்நகர், செல்வம்நகர், துவாரகாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

    பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 1912 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 1912 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி