இரண்டு தலைமுறைகளாக சந்தன மாலை தயாரித்து இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் சந்தன மாலைகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர் தஞ்சை அடுத்த தண்டாங்கோரை கிராமத்தை சேர்ந்த கைவினை கலைஞர் செல்வராஜ்.
மாலை என்றவுடன் மலர்களால் தொடுக்கப்படும் மாலைதான் உடனே ஞாபகத்திற்கு வரும். ஆனால் சந்தனமாலை, ஜவ்வாது மாலை, ஏலக்காய் மாலை, கிராம்பு மாலை, நெல்மணி மாலை என பல்வேறு வகையான மாலைகள் உள்ளன.
பல வண்ண மலர்களைக் கொண்டு மாலை தொடுத்தாலும், அந்த மாலைகள் அடுத்த நாள் வாடி வதங்கிவிடும். ஆனால் சந்தன மாலைகள் காலத்துக்கும் வாடாமல் இருக்கும். அதனால் புத்தாண்டுஉள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில், முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் போது, அவர்களை கவுரவிக்க சந்தன மாலைகளை அணிவிப்பது வழக்கமாக உள்ளது.
பல சிறப்புகள் கொண்ட இடங்களில் பயண்படுத்தப்படும் இந்த சந்தன மாலைகள் எப்படி உருவானது எப்படி உருவாகிறது என்பதை பின்வருமாறு காணலாம்:
கடந்த 50 ஆண்டுகளுக்கு தஞ்சையில் உருவானது சந்தன மாலை, வம்பாரை மரத்தை துகளாக செய்து அந்த மாவில் பிசின் சேர்ந்து உருவாகிறது இந்த சந்தன மாலை. மாவை நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டையாக வைத்து அதில் துளையிட்டு நன்கு காயவைத்து அதன் மேல் சந்தன கலவையை மூழ்கி அதையும் நன்கு காய வைத்து பின்னர் பலவிதமான டிசைன்களில் மாலைகளாக தொடுக்கப்பட்டு வருகிறது.
மலர்களில் செய்யப்படும் சாதாரண மாலை என்பது ஒரு நாளிலேயே வாடி0விடும். அதன் மனமும் ஒரு நாளிலே போய்விடும். ஆனால் சந்தன மாலை அப்படி கிடையாது. பல நாட்களாக அதன் மனம் மாறாமல் இருக்கும். இந்த சந்தன மாலை தஞ்சையில் பலரால் தொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சை தண்டாங்கோரை பகுதியில் உள்ள செல்வராஜ் என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக சந்தன மாலைகளை தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் சந்தன மாலைகள் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
400 லிருந்து அதிகபட்ச விளையாட்டு வழியாக ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த சந்தன மாலைகள் புத்தாண்டு தலங்களிலும் பண்டிகை காலங்களிலும் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். இந்த சந்தன மாலைகள் 2 சரங்களில் தொடங்கி 20 சரங்கள் வரை தொடுக்கப்படும்.
இதுகுறித்து கைவினை கலைஞர்கள் செல்வராஜ் கூறுகையில், “எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க. எங்க குடும்பத்தில் உள்ள அணைவரும் தான் இந்த வேலையை செய்து வருகிறோம். வேலைக்கு ஆட்களும் உள்ளனர்.இதை வைத்து தான் நாங்கள் வாழ்க்கையில் முன்னேறி வருகிறோம்.
சந்தனமாலை விற்பனை நன்றாக தான் இருக்கிறது. ஆனால் இந்த மாலை தெடுப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருட்களுக்கு ஜி.எஸ்டி. வரி விதிக்கப்படுவதால் லாபம் மிக குறைவாக தான் இருக்கிறது. நாங்கள் மொத்தமாக சர்வோதய சங்கம், காதிபவன் நிறுவனங்களுக்கு சந்தனமாலையை அனுப்பி வைக்கிறோம்.
நாங்கள் ரூ.100 முதல் ரூ.1000 வரை சந்தன மாலையை விற்பனை செய்கிறோம். முன்பு குடிசை தொழிலாக சந்தன மாலை தொடுக்கும் பணியில் பெண்கள் அதிகம் பேர் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இப்போது 100 நாள் வேலை திட்டத்திற்கு எல்லோரும் செல்வதால் சந்தன மாலை தொடுப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஏனென்றால் சந்தன மாலை தொடுக்க வழங்கப்படும் ஊதியத்தை விட 100 நாள் வேலை திட்டத்தில் கூடுதல் ஊதியம் வழங்கப்படுகிறது. சந்தன மாலை மட்டு மின்றி நெல்மணிமாலை, ஏலக்காய்மாலை, கிராம்பு மாலைகளையும் தயார் செய்து வருகிறோம்” என்றார்.
செய்தியாளர் : ஆனந்த் - தஞ்சாவூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore