ஹோம் /தஞ்சாவூர் /

பொங்கல் கரும்பு சாகுபடி எப்படி செய்றாங்க தெரியுமா? தஞ்சை ஓரத்தநாடு வயல்வெளிக்கு ஒரு விசிட்

பொங்கல் கரும்பு சாகுபடி எப்படி செய்றாங்க தெரியுமா? தஞ்சை ஓரத்தநாடு வயல்வெளிக்கு ஒரு விசிட்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Tanjore District News : பொங்கல் கரும்பு சாகுபடியில் அறுவடைக்கு தயாராகி வரும் கரும்புகள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

பொங்கல் கரும்பை பொறுத்த வரையில் சாகுபடி செய்ய 10 மாத காலம் வரை ஆகும். சித்திரை மாதத்தில் பயிரிடப்பட்ட கரும்புகள் ஜனவரி மாதத்தில் தான் அறுவடை செய்யப்படும்.

ஓராண்டு பயிரான கரும்பின் வேர்கள் நன்றாக வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை மண்ணில் இருந்து பெற வேண்டுமானால் வயலில் குறைந்தது 30 செ.மீ ஆழம் வரை மண் மிருதுவாக இருக்க வேண்டும். டிராக்டர் மூலம் உழவு செய்வதாக இருந்தால், முதல் உழவை சட்டிக் கலப்பை அல்லது இறக்கை கலப்பை மூலமும் 2-வது மற்றும் 3-வது உழவை கொத்துக் கலப்பை மூலம் செய்ய வேண்டும்.

மேடு, பள்ளங்கள் அதிகம் இல்லாத நிலமாக இருந்தால், 3-வது உழவுக்குப் பின் சமன் செய்யும் கருவி கொண்டு நிலத்தை சமன் செய்து, பின்னர் பார் பிடிக்கும் கலப்பை கொண்டு பார்களைப் அமைக்க வேண்டும். நல்ல வளமான மண்ணில் குறைந்த தூர்விடும் ரகமாக இருந்தால் 75 செ.மீ இடைவெளி விட வேண்டும்.

இதையும் படிங்க : தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்

கரும்பு பயிர் நன்கு வேர் ஊன்றி வளரவும், கரும்பு வளர்ந்த பின்னர் சாயாமல் இருக்கவும், பார்களுக்கு இடையே 20 செ.மீ முதல் 30 செ.மீ ஆழத்தில் சால் அமைக்க வேண்டும்.

நாற்றங்கால் தயாரிப்பு :

6 மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் ரகங்களிலிருந்து விதை பருக்களை சேகரிக்க வேண்டும். விதைப்பருக்களின் முளைப்பு திறனை தூண்டும் வகையில் 1 கிலோ யூரியா, 50 கிராம் கார்பன்டாசிம், 200 மி.லி மாலத்தியான் ஆகியவைகளை 100 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்.

அதில் 5000 விதைப் பருக்களை நன்கு நனையும்படி 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் உலர வைக்க வேண்டும். உயிரியல் முறையில் விதை நேர்த்தி செய்வதற்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பின் விதைப் பருக்களை 15 நிமிடம் ஊற வைத்து நிழலில் 15 நிமிடம் உலர வைக்க வேண்டும்.

விதை நேர்த்தி செய்த விதைப் பருக்களை கோணிப்பையில் கற்று புகாவண்ணம் இறுக கட்டி நிழலில் 5 நாட்கள் வைத்திருக்க வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை. முதலில் குழி தட்டுகளின் பாதியளவில் தென்னை நார் கொண்டு நிரப்ப வேண்டும்.

பின்பு விதைப் பருக்களை மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை தென்னை நார் கொண்டு நிரப்பிட வேண்டும். தினசரி தண்ணீர் தெளிக்க வேண்டும்.

நடவு செய்தல் :

நாற்றங்காலில் நாற்றுகள் 25 முதல் 30 நாட்கள் வயது அடைந்தவுடன் வேர்ப் பகுதியில் உள்ள தென்னை நார்க் கழிவுடன் சேர்த்து 5 x 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

பயிர்நடவு செய்த 15 முதல் 30 நாட்களில் அல்லது 2 முதல் 3 பக்க சிம்புகள் வந்தபின் மண்ணில் இருந்து ஓர் அங்குல உயரத்தில் கவாத்து செய்யும் கத்தரி கொண்டு வெட்டிவிட வேண்டும்.

இதையும் படிங்க : மழை பெய்யுதே.. ரெயின் கோட் போட்டு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்... தஞ்சாவூரில் சுவாரஸ்ய சம்பவம்!

வெட்டுவதற்கு முன் சொட்டு நீர்ப் பாசனமாக இருந்தால் அதன் மூலம் யூரியா அளிக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்காவிடில் ஒரு தேக்கரண்டி அளவு யூரியா இட வேண்டும். கரும்புக்குத் தேவையான நீரை சிக்கனமாக, பயிருக்கு வேண்டிய அளவு மட்டும் தினமும் அளிக்க வேண்டும்.

இதற்கு சொட்டு நீர் பாசனம் சிறந்தது. கரும்பு 5 முதல் 7 மாத பயிராக இருக்கும் போது சாதாரணமாக 30 இலைகள் வரை இருக்கும். பயிரின் மேற்பகுதியில் உள்ள 8 முதல் 10 இலைகள் மட்டுமே ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுகின்றன. மற்ற இலைகள் சத்தை உறிஞ்சுவதில் போட்டியிடுவதால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

எனவே, இந்த நேரத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள காய்ந்த இலைகளை, ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படாத இலைகளை உரித்து பார்களில் பரப்பி விடுவதால் பயிர் வளர்ச்சி சீராக இருப்பதோடு, மண்ணில் ஈரம் காக்கப்படுகிறது.

இதுகுறித்து கடந்த சில ஆண்டுகளாக கரும்பு சாகுபடி செய்யும் தஞ்சையை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், “கரும்பு சாகுபடியை எங்கள் குடும்பத்தை சேர்ந்தவரின் ஒத்துழைப்பு தொடர்ந்து செய்து வருகிறேன். இதில் இந்த முறை 1 மா நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகிறேன். 4500 விதைகள் வரை பயிரிட்டு உள்ளேன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் 6000க்கும் மேற்பட்ட கரும்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 45-60 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். இதில் உரங்களுக்கு ஆகும் செலவு எல்லாம் போக 30-35 ஆயிரம் வரை கிடைக்கும். மழையால் கரும்புகள் சேதமடைந்தால் விற்பனை செய்ய முடியாது, வீணாகிவிடும்” என்று கூறினார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore