தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு தரமான உளுந்து விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் விதிகளை மீறும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தரமான உளுந்து விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தஞ்சை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தஞ்சை மாவட்டத்தில் தற்போது உளுந்து சாகுபடி தனிப்பயிராகவும், நெல் வயல் வரப்பில் உளுந்து சாகுபடி செய்யும் பணிகளில் தற்போது விவசாயிகள் ஆர்வமுடன் தயாராகி வருகிறார்கள். உளுந்து விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், சான்று பெற்ற, சான்று அட்டை பொருத்தப்பட்ட தரமான உளுந்து விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு தரமான உளுந்து விதைகள் விற்பனையின் போது விதைச்சட்ட விதிகள்படி, கொள்முதல் பட்டியலில் விதை விற்பனை உரிமம் எண், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், உற்பத்தியாளர் விவரம் உட்பட அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். சான்று அட்டை குறிப்பாக ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதைகளையே விற்பனை செய்ய வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
விதை விற்பனையாளர்கள் தரமான உளுந்து விதைகளின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், குவியல் வாரியாக விதை மாதிரி பரிசோதனை செய்த முளைப்பு அறிக்கை மற்றும் பதிவுச்சான்றிதழ் ஆகியவற்றை, கண்டிப்பாக தங்களது விற்பனை நிலையங்களில் வைத்திருக்க வேண்டும்.
Must Read : 5 மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து போற்றும் ஆங்கிலேயர் பென்னிகுவிக்! - யார் இவர்?
தர பரிசோதனை அறிக்கை, பதிவுச்சான்றிதழ் இல்லாத உளுந்து விதைகளை விற்பனை செய்யும் விதை விற்பனையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Thanjavur