ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் பூதலூர் அருகே சோழர் கால கல்வெட்டுகள், சிற்பங்கள் கண்டெடுப்பு 

தஞ்சையில் பூதலூர் அருகே சோழர் கால கல்வெட்டுகள், சிற்பங்கள் கண்டெடுப்பு 

தஞ்சை

தஞ்சை

Thanjavur | தஞ்சையில் பூதலூர் வட்டத்துக்கு உள்பட்ட காமதேவமங்கலத்தில் உள்ள அய்யனார் கோயில் வளாகத்தில் கல்வெட்டுகளும், கோயிலுக்கு அருகிலுள்ள வயலில் சில சிற்பங்களும் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இவை சோழர் காலத்தை சேர்ந்தவை என தெரியவந்துள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே காமத்தீ என அழைக்கப்படும் காமதேவமங்கலத்தில் கி.பி. 12 – 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும், சிற்பங்களும் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.

பூதலூர் வட்டத்துக்கு உள்பட்ட காமதேவமங்கலத்தில் உள்ள அய்யனார் கோயில் வளாகத்தில் கல்வெட்டுகளும், கோயிலுக்கு அருகிலுள்ள வயலில் சில சிற்பங்களும் கிடப்பதாக சித்தாயல் ஜெயபால் அளித்த தகவலின்படி, புங்கனூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பால சுப்ரமணியன், காமத்தீ சக்திவேல், அய்யனாபுரம் மணிவேல், சஞ்சீவிபுரம் செல்வகுமார் ஆகியோர் உதவியுடன் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் சோ. கண்ணதாசன், பொந்தியாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளித் தலைமையாசிரியர் கோ. தில்லை கோவிந்தராஜன், உக்கடை அப்பாவு தேவர் மேல்நிலைப் பள்ளி முதுநிலை வரலாற்று ஆசிரியர் ரெ. சின்னையன்,கல்லூரி மாணவர்கிருஷ்ண குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் படிக்க:  தஞ்சாவூர் மாவட்டத்தில் மறக்காமல் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்.!

இதுகுறித்து கண்ணதாசன், தில்லை கோவிந்தராஜன் தெரிவித்ததாவது, “இங்கு கி.பி. 12-13 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட இரண்டு துண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் முதலாவது கல்வெட்டில் திரு மாது புவி, குலோத்துங்க, மூன்று மா என்ற சொற்கள் காணப்படுகின்றன. திருமாது புவி என்னும் சொல் இரண்டாம் இராசேந்திரனின் மெய்கீர்த்தியின் தொடக்க வரி என்றும், இரண்டாவது கல்வெட்டில் அரசனின் ஆட்சி யாண்டு 42 ஆவது எனக் குறிப்பதுடன், ஏரியூர் நாடு என நாட்டு பெயரும், வேம்பன், குலோத்துங் கன் என்ற பெயர்களுடன் இது செய்யக்கடவ செய்து கல்வெட்டினது வேளானும் என்ற தொடரும் காணப்படுகிறது.

மேலும் படிக்க:  247 தமிழ் எழுத்துக்களால் சிவனுக்கு எழுப்பப்பட்டதா தஞ்சை பெரிய கோவில்..? ஆச்சரியப்படவைக்கும் ராஜராஜ சோழனின் தமிழ் பற்று பற்றிய கதைகள்...

இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழர்காலத்தைச் சார்ந்தது. இங்கு காணும் சிற்பங்களில் துவார பாலகர் சிற்பம் இடதுகாலை ஊன்றி வலது காலை கதை என்னும் ஆயுதத் தின் மீது வைத்தும், கைகள் உடைந்த நிலையிலும் உள்ளது.

சிவனின் தாண்டவ சிற்பம்

இரு கால்களைச் சதுர வடிவமாகக் கொண்டும், வலது முன் கை உடைந்தும், இடது முன் கை மார்புக்குக் குறுக்காகவும், வலது பின்கை முற்றிலும் உடைந்தும், இடது பின்கை மான் ஏந்தியும் சதுரத்தாண்டவர் சிலை காணப்படுகிறது. இவற்றின் அருகில் லிங்கம் ஒன்றும் உள்ளது.

மேலும் படிக்க:  குழந்தை பாக்கியம் பெற, கர்ப்பத்தை காக்க தஞ்சையில் முக்கிய கோவில் - கர்ப்பரட்சாம்பிகையின் சிறப்புகள்...

மேலும், இவ்வூர் குறித்து தஞ்சாவூர் பெரியகோயில் கல்வெட் டில் பாண்டிய குலாசனி வள நாட்டு புறக்கிளியூர் நாட்டு காம தேவமங்கலம் என்றும், இவ்வூரைச் சேர்ந்த காஞ்சன் கொண்டையன் என்பவன் முதலாம் இராசராசனின் பணி மகனாகப் புரவரித்திணைகளத்து வரிப்புத் தக நாயகனாக இருந்ததையும், இவன் பெரியகோயில் பரிவாராலயத்துப் பிள்ளையாருக்கு வெள்ளித்தளிகை ஒன்று வழங்கியதையும், முதலாம் இராசேந்திரன் காலத்திலும் இப்பதவியை வகித்து வந்தார் எனவும் திருவாலங்காட்டு செப்பேட்டிலும் காணமுடிகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவ்வரிப்பொத்தக நாயகன் என்ற அரசியல் அதிகாரிகாலத் திலிருந்து தொடர்ந்து இவ்வூ ரும். இவ்வூர்ச் சுற்றுப்பகுதிகளும் சிறப்புடன் விளங்கியிருக்க வேண்டும் என கண்ணதாசன், தில்லை கோவிந்தராஜன் தெரிவித்தனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur