முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை பிலோமினா நகர் பகுதி மக்களை அச்சுறுத்தும் கரடுமுரடான சாலை..

தஞ்சை பிலோமினா நகர் பகுதி மக்களை அச்சுறுத்தும் கரடுமுரடான சாலை..

X
சேதமான

சேதமான சாலை

Dilapidated Road in Tanjore Philomena Nagar | தஞ்சை பிலோமினா நகர் பகுதியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலை சேதமடைந்துள்ளது.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பர்வின் தியேட்டர் அருகே பிலோமினா நகர் உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்து மூலம் தார்சாலை போடப்பட்டது. தற்போது கடந்த 2 ஆண்டுகளாக பிலோமினா நகர் முழுவதும் உள்ள சாலைகள் சேதமடைந்து கற்கள் சிதறி குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

இப்பகுதியிலிருந்து புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையத்திற்கு இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மூலமாக பலர் வேலைகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் தஞ்சை நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தஞ்சை பிலோமினா நகர் பகுதி மக்களை அச்சுறுத்தும் கரடுமுரடான சாலை

இதையும் படிங்க : திருநெல்வேலியில் நீச்சல் கத்துக்க இப்படி ஒரு இடமா? 

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதி சுற்றியுள்ள பழனியப்பா நகர், வெங்கடேசன் நகரில் உள்ள பொதுமக்களுக்கும் இச்சாலை பாதிப்பை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிலோமினா நகரில் உள்ள மோசமான சாலையை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Thanjavur