முகப்பு /தஞ்சாவூர் /

10 வருடத்திற்கு முன்பு இந்த படம் வந்திருந்தால்.. தனுஷின் வாத்தி படம் குறித்து தஞ்சை ரசிகர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

10 வருடத்திற்கு முன்பு இந்த படம் வந்திருந்தால்.. தனுஷின் வாத்தி படம் குறித்து தஞ்சை ரசிகர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

X
தனுஷின்

தனுஷின் வாத்தி

Vaathi Movie Review : தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படத்தை தஞ்சை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உள்ள தனுஷ் வித்தியாசமான கதை களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் எல்லாவிதமான கதாப்பாத்திரங்களிலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியும் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அந்த வரிசையில், தெலுங்கு திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'.

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஒரு சாதாரண மக்களுக்கு ஆதரவாக நின்று பெரிய ஹீரோவாக மாறும் கதைக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாகவே இருக்கும். தனுஷின் வாத்தி படமும் அப்படிபட்ட கதையை கொண்டது தான்.

கதை சுருக்கம் :

பொறியியல், மருத்துவம் போன்ற கல்வியின் வியாபார நுணுக்கத்தை தெரிந்து கொண்ட தனியார் பள்ளிகள் நுழைவுத்தேர்வுக்காக பயிற்சி மையங்களை தொடங்கி தரமான பள்ளி ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அரசு பள்ளிகளை மூடுகின்றனர். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்கவேண்டும் என்று மக்கள் போராட்டம் செய்ய கட்டண ஒழுங்குமுறை விதியை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க அரசு நினைக்கிறது.

வாத்தி

இதை தெரிந்துக்கொண்ட சமுத்திரக்கனி (வில்லன்) அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அனைவருக்கும் கல்வி கொடுப்பதாக அறிவிக்கிறார். மூடப்பட்ட அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த 2ம், 3ம் தர ஆசிரியர்களை அனுப்பி அவர்களின் கல்வியை கெடுக்க நினைக்கிறார். அதில் கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என நல்ல எண்ணம் கொண்ட வாத்தியாராக தனுஷ் (பாலா) இருக்கிறார். தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கையை கல்வி மூலம் தனுஷ் எப்படி மாற்றுகிறார் என்பது தான் கதையின் கரு.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ரசிகர்கள் கருத்து :

படம் பார்த்து ரிவியூ சொன்ன ஒவ்வொருவரும் படத்தை பார்த்த உணர்ச்சிவசத்தில் படத்தை பாராட்டி தள்ளியுள்ளனர். கல்வி எந்த அளவிற்கு முக்கியம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். நாங்கள் எதிர்பார்த்ததை விட படம் மிக அருமையாக வந்திருக்கிறது என்றும், 10 வருடத்திற்கு முன்பு இந்த படம் வந்திருந்தால் இந்நேரம் படித்து மிகப் பெரிய பதவிகளில் உயர்ந்திருப்போம் என்றும் ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் வந்து பார்க்க வேண்டிய படம் இது. படம் பார்த்த அனைவரும்கிட்டத்தட்ட பாசிட்டிவ் ரிவியூவை கொடுத்துள்ளனர்.

First published:

Tags: Tanjore