ஹோம் /தஞ்சாவூர் /

போலீஸ்னு சொல்லி கூப்பிடுவாங்க.. அப்பவும் போயிடாதீங்க.. தஞ்சை போலீஸ் இன்ஸ்பெக்டரின் அன்பான அறிவுரையை கேளுங்க..

போலீஸ்னு சொல்லி கூப்பிடுவாங்க.. அப்பவும் போயிடாதீங்க.. தஞ்சை போலீஸ் இன்ஸ்பெக்டரின் அன்பான அறிவுரையை கேளுங்க..

தஞ்சாவூர் 

தஞ்சாவூர் 

Thanjavur Deepavali Shopping | தீபாவளி ஷாப்பிங் வரும் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து தஞ்சை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கூறும் அன்பான அறிவுரைகளை கேளுங்க...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

2022 ம் ஆண்டின் தீபாவளி திருநாள் அக்டோபர் மாதம் 24 ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் தஞ்சையில் ஷாப்பிங்கு வரும் பொது மக்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு அன்பாக அறிவுரை வழங்கி வருகிறார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர்.

தீபாவளி என்ற சொல்லுக்கு தொடர்ச்சியான ஒளி விளக்குகள் என்று பொருள். இதனால் தான் தீபாவளியை விளக்குகளின் திருவிழா என்று குறிப்பிடுகிறோம். தீபாவளி என்பது இருளின் மீது ஒளியின் வெற்றியைக் குறிக்கிறது. இந்த தீபாவளி பண்டிகை வரும் பத்து நாட்களுக்கு முன்பே பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்கு ஆர்வமுடன் செல்வார்கள்.

அதன்படி தஞ்சையிலும் தற்போது ஷாப்பிங் செய்யும் பொது மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. கூட்ட நெரிசலை தடுப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதில் முக்கியமாக, அண்ணா சிலை மற்றும் ஆத்துப்பாலம் இந்த இரண்டு வழியாக தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளை சோழன் சிலை, பெரிய கோயில் வழியாக செல்லும்படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலையோர வியாபாரிகளுக்கு கடை வைப்பதற்கு மாநகராட்சி சார்பில் கடை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

இது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் பொதுமக்களின் கூட்டமானது அதிக அளவில் வந்துகொண்டே தான் இருக்கிறது.. அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போக்குவரத்து காவல் துறையினர் முடிந்த அளவிற்கு பல புதிய புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

தீபாவளி ஷாப்பிங் வரும் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து தஞ்சை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கூறியதாவது, “தஞ்சையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பொதுமக்களின் கூட்டமானது அலைமோத தொடங்கியிருக்கிறது. மேலும்  கூட்ட நெரிசலை பயன்படுத்தி, திருடர்கள் தங்கள் வேலையை காட்ட தயாராக இருப்பார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில்  காவல்துறை என்று கூறி அழைத்துச் செல்வது, பிட் பாக்கெட் அடிப்பது, வாகனங்களை திருடுவது, இது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுவார்கள். மக்கள் கூட்டத்தில் மொபைல் போன்களை பயன்படுத்தாமல் இருந்து பாதுகாப்பாக தீபாவளி ஷாப்பிங் முடிக்க வேண்டும் என பொது மக்களிடம் அன்பாக அறிவுரை கூறினார்.

Published by:Arun
First published:

Tags: Deepavali, Diwali, Local News, Thanjavur