ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் தீபாவளி மருந்து அமோக விற்பனை.. இதன் பயன் என்ன?

தஞ்சையில் தீபாவளி மருந்து அமோக விற்பனை.. இதன் பயன் என்ன?

தஞ்சை

தஞ்சை - தீபாவளி மருந்து

Thanjavur Deepavali Legiyam | பலகாரங்களை உண்பதால் தொண்டைப் பிரச்னை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு இம்சை செய்யும். பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி மருந்து அல்லது லேகியம் தயாரிக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு அளவில்லாமல் பலகாரங்களை உண்பதால் தொண்டைப் பிரச்னை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு இம்சை செய்யும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி மருந்து அல்லது லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்வதால் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்கிறார்கள் நம் முன்னோர்கள்.

தேவையான பொருட்கள்:

சுக்கு – 1 துண்டு

சீரகம் – 2 1/2 அரை மேஜைக் கரண்டி

மிளகு - 2 மேஜைக்கரண்டி

தனியா(மல்லி) - 2 1/2 அரை ‌ மேஜைக்கரண்டி

ஓமம் – 1 கப் (சுமார் 25 கிராம்)

கிராம்பு - 2

ஏலக்காய் – 2

சித்தரத்தை - 10 கிராம்

நெய் – ஒரு கப்

வெல்லம் – 100 கிராம் (அரைத்த விழுதின் அளவிற்கு சமமாக வெல்லத்தைப் போட்டால் நன்றாக இருக்கும்)

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

செய்முறை:

இந்த பொருட்களையெல்லாம் நன்றாக இடித்து நொறுக்கி பொடி செய்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறிய பின் அம்மியில் வைத்து, அந்தத் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து, நைசாக மாவு போல் அரைத்து எடுத்துக் கொண்டு போதிய அளவு கப் தண்ணீர் சேர்த்து குழம்பு போல் கரைத்துக் கொண்டு, மண் சட்டியில் வைத்து, கரண்டியால் அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

தண்ணீர் சுண்டி கெட்டியாக வந்தபின், வெல்லத்தூளை போட்டுக் கிளறி நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாகச் சுண்ட வேண்டும். சுண்டக்காய்ச்சிய பிறகு இறக்கவும்.

தீபாவளி அன்று பலகாரம் அசைவ உணவுகளோடு இந்த தீபாவளி லேகியயத்தையும் சேர்த்து ..மன நிறைவுடன் இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடுங்கள்..

மேலும் படிக்க:  திருச்சியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட், சிறந்த பொழுதுபோக்கு இடம் இப்ராஹிம் பூங்கா - அழகும் சிறப்பும்!

இது குறித்து  தஞ்சாவூர் கீழ வாசலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டு மருந்து கடை வைத்திருக்கும் உரிமையாளர் கூறுகையில்:

இந்த நாட்டு மருந்தை சாப்பிடுவதன் மூலம் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த தீபாவளி மருந்தை சாப்பிடலாம் தீபாவளி அன்று பலகாரத்திலும் அசைவ உணவிலும் ஆர்வம் காட்டும் நாம் இந்த தீபாவளி மருந்தையும் அதோடு சேர்த்து நிம்மதியாக இந்த தீபாவளியை கொண்டாடுவோம் என்று கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Deepavali, Local News, Thanjavur