தஞ்சாவூர் ஒரு பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். இந்த நகரம் காவிரி டெல்டாவில் அமைந்துள்ள ஒரு முக்கியமான விவசாய மையமாகும், மேலும் இது “தமிழ்நாட்டின் அரிசி கிண்ணம்” என்று அழைக்கப்படுகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தஞ்சாவூர் நகராட்சி தமிழக அரசால் மாநகராட்சியாக மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 2016 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் சிட்டி சேலஞ்ச் போட்டியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆனது இரண்டாவது சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர், தஞ்சாவூர் நகரத்தின் அடிப்படை மேம்பாட்டிற்கான தற்போதைய முன்மாதிரி வடிவமைப்பு முன்மொழிக்கப்பட்டது.
இதில் தற்போது இருக்கும் நகரத்தின் அடையாளம் மற்றும் கட்டுமானங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வலுவான கட்டுமானங்கள் உடன் நிறைய பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூரின் ராசப்பா பூங்கா
தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பனிகள்: சுமார் 1,289.5 கோடி ரூபாய் மதிப்பில் தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டிக்கு சுற்றுலா, பசுமைவெளி, பொருளாதார மேம்பாடு, நகர்ப்புற போக்குவரத்து, நீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் சாலைகள்/மோட்டார் அல்லாத போக்குவரத்து(என்எம்டி) போன்ற பல்வேறு துறைகளில் இருந்து திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் பேருந்து நிலையம்
மேலும் கலாச்சார நகரமாக தஞ்சை இருப்பதால் அதை இன்னும் மேம்படுத்த அறிவிக்கப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி கட்டுமானப் பணி
ஸ்மார்ட் திட்ட பணிகள்: தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம், அகழி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் மறு மேம்பாடு, சிவகங்கை பூங்காவை புதுப்பித்தல், சிவகங்கை குளப் பாதுகாப்பு மற்றும் அய்யன் குளம், சாமந்தன் குளம் மறுசீரமைப்பு

சாலைப் பணிகள்
ராஜப்பா பூங்காவை மேம்படுத்துதல் மற்றும் பெத்தண்ணன் கலையரங்கத்தில் ஆம்பி தியேட்டர் வளர்ச்சி. பழைய ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரண்மனை உட்பட கட்டப்பட்ட பாரம்பரியத்தை பாதுகாத்தல், காமராஜ் மற்றும் சரபோஜி சந்தைகளின் வளர்ச்சி.
பத்து ஸ்மார்ட் சாலைகள், பழைய பேருந்து நிலையத்தை சீரமைத்து திருவையாறு பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் மேம்பாடு, திருவள்ளுவர் திரையரங்கம் வணிக வளாகமாக மாற்றம்.
மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் சுற்றுலா பயன்பாடு, காற்று தர கண்காணிப்பு அமைப்பு, அரசு கட்டிடங்களில் சோலார் பேனல்கள் பொருத்துதல், நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வசதியை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் இருந்தது.

சாலைப் பணி
நடைபெற்றுகொண்டிருக்கும் பணிகள்: தஞ்சை முழுவதும் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதில் கிட்டத்தட்ட 15க்கு மேற்பட்ட சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியின் மருத்துவ கல்லூரியில் கட்டுமானங்கள் கட்டப்பட்டு வருகிறது.
தஞ்சையில் பல இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு வருகிறது. மாரிக்குளம் பொதக்குழியில் தகன குடம் கட்டப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் திருவள்ளூர் திரையரங்கத்தை அகற்றி அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
தஞ்சை நகரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பல வருடங்களாக வணிகர்கள் கடைகள் நடத்தி வந்த நிலையில் அதில் பல கடைகளில் அரசுக்கு சொந்தமான இடம் வரை தகர்த்து அந்த இடத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தஞ்சை முழுவதும் பல கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சாலை ஓரங்களில் இருக்கும் பழைய கடைகளை அகற்றி புதிய கடைகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் பல பணிகள் நிலுவையில் உள்ள நிலையில் ஒவ்வொன்றாக தஞ்சை மாநகராட்சி முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிறைவடைந்த பணிகள்: தஞ்சை பழைய பேருந்து நிலையம், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் பல இடங்களில் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜப்பா பூங்கா கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சேதமடைந்த ஆற்று பாலங்கள் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாநகராட்சி முழுவதும் ஸ்மார்ட் சிட்டிக்கு தேவையான அனைத்து வகையான வசதிகளும் மற்ற கட்டட பணிகளும் கட்டப்பட்டும் சில பணிகள் நடைபெற்றும் கொண்டிருக்கின்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.