ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை| மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இனி செடிகள் வாங்கலாம்- தூய்மை பணியாளர்கள் நிர்வகிக்கும் நர்சரி

தஞ்சை| மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இனி செடிகள் வாங்கலாம்- தூய்மை பணியாளர்கள் நிர்வகிக்கும் நர்சரி

X
நர்சரி

நர்சரி கார்டன்

Thanjavur | தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நிர்வகிக்கும் வகையில் ஆட்சியர் நர்சரி கார்டன் அமைத்துக் கொடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் நர்சரியை திறந்துவைத்து, செடிகள் விற்பனையையும் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில், பகுதி நேரமாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் 12 பேரை மகளிர் சுய உதவிக் குழுக்களாக ஒன்றிணைத்து, தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நர்சரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நர்சரியில், பூந்தோட்ட நாற்றங்காலை பராமரித்து, பூச்செடிகளை விற்பனை செய்யும் வகையில், மருங்குளம் அரசு தோட்டக்கலைத்துறைப் பண்ணையில் தூய்மை பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்நர்சரியை கடந்த 17-ம் தேதி திறந்துவைத்து, செடிகள் விற்பனையை தொடங்கி வைத்தார்.இது குறித்து பேசிய ஆட்சியர், ‘ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்ட நேரத்தில், செம்மண் நிறைந்த பொட்டல்காடாக இருந்தது.

தற்போது மரங்கள் நிறைந்த சோலையாக காட்சியளிக்கிறது.சோலையாக மாற்றியதில் தூய்மை பணியாளர்களின் பங்களிப்புஅதிகம். மாவட்ட அலுவலகத்தில் தூய்மை பணிகளை முடித்து விட்ட பிறகு, அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் செடிகள் விற்பனை செய்யும் நர்சரி உருவாக்கப்பட்டுள்ளது.

நர்சரி கார்டன்

பணிநேரம் போக மீதமுள்ள நேரத்தில், பூந்தோட்ட நாற்றங்கால் உற்பத்தி மற்றும் விற்பனை மூலம், அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. வருங்காலத்தில், பூச்செடிகள் மட்டுமில்லாமல், பழக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்படும்" என்றார்.

அஜித்தின் துணிவு படத்துக்கு அழைத்து செல்லாத விரக்தியில் +2 மாணவி தற்கொலை.. படம் முடிந்து வீடு திரும்பிய பெற்றோர்கள் அதிர்ச்சி

தற்போது இந்த நர்சரி பற்றிஅங்கு பணியில் உள்ள தூய்மை பணியாளர்களிடம் பேசியபோது அவர்கள் கூறுகையில், ‘இது எங்கள் வாழ்வை உயர்த்தும் ஒரு வாய்ப்பாக உள்ளது. இந்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட ஆட்சியருக்குதான் நன்றியை தெரிவிக்க வேண்டும் என்றனர்.

செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.

First published:

Tags: Local News, Thanjavur