முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை மாத முதல் பிரதோஷம்... நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை மாத முதல் பிரதோஷம்... நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

X
தஞ்சை

தஞ்சை பெரியகோயில்

Tanjore Big Temple : பெரிய கோயிலில் இந்தாண்டு சித்திரை திருவிழா பந்தக்கால் நட்டதை தொடர்ந்து சித்திரை மாத முதல் திங்கள் சோமவார பிரதோஷம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. 

  • Last Updated :
  • Thanjavur, India

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை தேரோட்ட விழா வெகு சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கான ஏற்பாடுகளை துவங்குவதற்கான பந்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து சித்திரை மாத முதல் பிரதோஷமும் சேர்ந்து சிறப்பான நாளாக அமைந்து சித்திரை மாதம் முதல் திங்கள் சோமா வார பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பிரதோஷத்தில் பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், எலுமிச்சை சாறு , திரவியப்பொடி, கரும்புச்சாறு, அரிசிமாவு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பெரிய கோயிலில் நேற்று காலையில் சித்திரை தேரோட்ட விழாவிற்கு பந்தக்கால் நட்ட நிலையில் தொடர்ந்து பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மேலும் இதனுடன் பிரதோஷம் இணைந்ததால் சிறப்பான நாளாகவும் அமைந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சித்திரை விழா முதல் நாள் தொடக்கமாக பெரிய கோயில் வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பரதநாட்டிய நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Tanjore, Tanjore temple