முகப்பு /தஞ்சாவூர் /

கோனூர் நாடு வடக்கூர் கிராமத்தில் பால்குட காவடி திருவிழா..

கோனூர் நாடு வடக்கூர் கிராமத்தில் பால்குட காவடி திருவிழா..

X
கோனூர்

கோனூர் நாடு வடக்கூர் கிராமத்தில் பால்குட காவடி திருவிழா

Vadakur Manikkavasagar Temple : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கோனூர் நாடு  வடக்கூர் கிராமத்தில் மாணிக்க வாசகர் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது. 

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் கோனூர் நாடு வடக்கூர் கிராமத்தில் உள்ளது மாணிக்க வாசகர் திருக்கோயில். கோனூர் நாடு‌ 18 கிராமத்தை சேர்ந்த இக்கோயில் மிகவும் பிரசிதி பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி விழாவில் பால்குட காவடி திருவிழா நடைபெற்றது. காலை 6 மணிக்கு மங்கல இசையுடன் விநாயகருக்கு எண்ணெய் பால், தயிர், நெய்  உள்ளிட்ட பல அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மாணிக்கவாசகர் கோயில் இருந்து கிராமத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பட்டவன் கோயிலுக்கு சாமி ஊர்வலம் சென்று அங்கிருந்து மதியம் ஒரு மணி அளவில் பால்குடம் காவடி எடுத்து பக்தர்கள் ஆலயம் வந்தடைந்தனர்.

கோனூர் நாடு வடக்கூர் கிராமத்தில் பால்குட காவடி திருவிழா

இதில் கோனூர் நாட்டை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம், சடல் காவடியை பக்தி பரவசத்துடன் எடுத்தனர்‌‌.

கிராமத்தில் உள்ள சிறு வயது குழந்தைகளும் ஆர்வத்துடன் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில்அன்னதானம் வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் இரவில் மங்கள வாத்தியமும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சித்ரா பௌர்ணமி விழாவில் கோனூர் நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகர் அருளை பெற்றனர்.

    First published:

    Tags: Local News, Thanjavur