முகப்பு /தஞ்சாவூர் /

மே தினம் : 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கி அசத்திய தஞ்சை இளைஞர்..!

மே தினம் : 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கி அசத்திய தஞ்சை இளைஞர்..!

X
தஞ்சை

தஞ்சை பிரியாணிக்கடை

அடுத்த ஆண்டு உழைப்பாளர் தினத்தன்று இவரின் மூன்று கிளைகளிலும் 300 பேருக்கு 1 ரூபாய்க்கு பிரியாணி தர உள்ளதாக தஞ்சை இளைஞர் கார்த்தி தெரிவித்தார்.

  • Last Updated :
  • Thanjavur, India

ஒரத்தநாடு அருகே உள்ள ஓர் உணவகத்தில்  உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணியை வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தகுடி மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி. பொறியியல் பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 1.லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பிறகு வேலை பிடிக்காததால் சொந்த ஊருக்கே திரும்பினார்.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மேதகு திரைப்படம் வெளியான தினத்தன்று, தஞ்சையில் 'மேதகு' என்கிற பெயரில் பிரியாணியை கடையை தொடங்கினார். தற்போது தஞ்சையில் மூன்று கிளைகளுடன் செயல்பட்டு வரும் மேதகு பிரியாணி கடையில் வருடத்தில் ஒரு சில முக்கியமான தினங்களில் பிரியாணிக்கு ஆஃபர் களை வழங்கி வருகிறார்..

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தஞ்சையில் இவரது கடை வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஈஸ்வரி நகரில் மே-1 ல் இவரின் பிரியாணி கடையின் மூன்றாவது கிளையை திறந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாகவும் உழைப்பாளர் தினத்தன்று உழைக்கும் மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு பிரியாணியை வழங்கி வருகிறார்.

இதையும் படிங்க : தேனியில் ஒரு ரூபாய்க்கு 5,200 பேருக்கு பிரியாணி... மக்களை மகிழ்வித்த அஜித் ரசிகர்

அந்த வகையில் இந்த ஆண்டு உழைப்பாளர் தினமான நேற்று வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணியை வழங்கினார். முதல் 50 பேருக்கு மட்டுமே இந்த ஆஃபர் என அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் கூட்டம் கடையின் முன்பு நிரம்பியது. 50 டோக்கன் முடிந்த பின்னரும் வயதானவர்கள் கேட்டபோதும் பிரியாணியை இலவசமாக வழங்கினார்.

மேலும் அடுத்த ஆண்டு உழைப்பாளர் தினத்தன்று இவரின் மூன்று கிளைகளிலும் 300 பேருக்கு 1 ரூபாய்க்கு பிரியாணி தர உள்ளதாகவும் கூறினார்.

First published:

Tags: Local News, Tanjore