ஹோம் /தஞ்சாவூர் /

தீபாவளி ஸ்பெஷல்: சென்னை வழியாக தஞ்சைக்கு சிறப்பு ரயில் இயக்கம் - முழு விவரம்

தீபாவளி ஸ்பெஷல்: சென்னை வழியாக தஞ்சைக்கு சிறப்பு ரயில் இயக்கம் - முழு விவரம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

Chennai - Thanjavur Special Train | தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி தெலங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் இருந்து சென்னையில் வழியாக தஞ்சைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Chennai

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செகந்திராபாத் - தஞ்சாவூர் இடையே மெயின் லைனில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மார்க்கங்களில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. அந்த வகையில் மெயின் லைன் என்று அழைக்கப்ப டும் சென்னை, எழும்பூர், மயிலாடுதுறை வழியாக தஞ்சாவூர் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூர், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம் ரயில் நிலையங்களில்நின்று செல்லும்.

செகந்திரபாத் - தஞ்சாவூர் மார்க்கம்:

செகந்திராபாத் - தஞ்சாவூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 07685 ) அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 8.25 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு நால்கொண்டா, குண்டூர், தெனாலி, சென்னை எழும்பூர் (ஞாயிறு காலை 10.15), திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, வழியாக மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.10 மணிக்கு கும்பகோணம், 5.24 மணிக்கு பாபநாசம் வந்து தஞ்சாவூருக்கு இரவு 7 மணிக்கு சென்றடையும்.

மேலும் படிக்க:  திருச்சி பொன்மலையில் உருவாக்கப்பட்ட ஊட்டி மலைப்பாதை ரயில் என்ஜின் - சிறப்புகள் என்ன?

தஞ்சாவூர் - செகந்திரபாத் மார்க்கம்:

மறு மார்கத்தில் (வண்டி எண் 07686) தஞ்சாவூரிலிருந்து அக்டோபர் 24 மற்றும் 31ம் தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு புறப்பட்டு பாபநாசம் (காலை 7.19 ) கும்பகோணம் (காலை 7.48) சென்னை எழும்பூர் (பகல் 2 மணி) வந்து செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு செகந்திராபாத் சென்றையும்.

கும்பகோணம் வழியாக செகந்திராபாத் நகருக்கு ஏற்கனவே இயங்கி வந்த சிறப்பு ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பண்டிகைக் கால சிறப்பு ரயில் இவ்வழியே அறிவிக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே வரவேற்பை பெற் றுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த சிறப்பு ரயில் ஆந்திரா. தெலுங்கானா மாநில பகுதிகளில் மற்றும் சென்னையில் இருந்து மெயின் லைன் பகுதிக்கு தீபாவளியை ஒட்டி வரும் பயணிகளுக்கு நல்ல பயனாக அமையும்.

Published by:Arun
First published:

Tags: Deepavali, Local News, Thanjavur