முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / விசாரணைக் கைதிகளை சித்ரவதை செய்த விவகாரம்... முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு..!

விசாரணைக் கைதிகளை சித்ரவதை செய்த விவகாரம்... முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு..!

பல்வீர் சிங்

பல்வீர் சிங்

விசாரணை கைதிகளை காவல் நிலையத்தில் வைத்து பல்லை பிடுங்கி சித்ரவதை செய்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் குற்ற வழக்குகளில் சிக்கிய விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளார். பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 15 பேர், விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இந்நிலையில், விசாரணை அதிகாரியின் விரிவான விசாரணை நடைபெற்று வரும் போதே, குற்றச்சாட்டுக்கு உள்ளான பல்வீர் சிங் மீது திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மரணத்தை விளைவிக்கும் வகையில் ஆயுதத்தால் தாக்குதல், கொடுங்காயங்களை ஏற்படுத்துதல், குற்றவியல் மிரட்டல் என ஜாமீன் கிடைக்காத பிரிவுகளின் கீழ் பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும்... சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ...!

பல்வீர் சிங்கை விரைந்து கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், பல்வீர் சிங்கின் கைது நடவடிக்கை ஒரு எடுத்துக்காட்டாக நிலைக்கும் என கூறினார்.

top videos
    First published:

    Tags: Tamil Nadu