ஹோம் /தஞ்சாவூர் /

புற்றுநோயை தடுக்கும் தடுப்பூசி.. புற்றுநோயை குணப்படுத்த முடியுமா? தஞ்சை அரசு மருத்துவரின் எளிய விளக்கம்..

புற்றுநோயை தடுக்கும் தடுப்பூசி.. புற்றுநோயை குணப்படுத்த முடியுமா? தஞ்சை அரசு மருத்துவரின் எளிய விளக்கம்..

புற்றுநோயை

புற்றுநோயை குணப்படுத்த முடியுமா? தஞ்சை அரசு மருத்துவரின் எளிய விளக்கம்..

Cancer Facts | சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் புற்றுநோயை வெல்லலாம் தஞ்சை மருத்துவரின் ஆலோசனை 

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

சிகிச்சை பெற்றால் புற்று நோயை வெல்லலாம் என்கிறார் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி புற்றுநோய் தலைமை மருத்துவர் Dr.S மாரிமுத்து. புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், புற்று நோய் வந்தால் அதில் இருந்து விடுபடுவது எப்படி? என்பது தொடர்பாக அவரிடம் நாம் முன்வைத்த கேள்விகளுக்கு சாமானியரும் புரிந்து கொள்ளும் வகையில் அவர் அளித்த விளக்கங்களை தெரிந்து கொள்வோம்.

புற்றுநோய் ஏற்பட காரணங்கள்:

மனிதன் தனது வாழ்நாளில் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறான். அவற்றில் புற்றுநோய்  முதன்மையானதும் கொடியதுமாகும். இதய நோயால் ஏற்படும் இறப்புகளை விட புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளே அதிகம். புற்றுநோய் பலவிதமான காரணங்களால் ஏற்படுகிறது.

சூரியனில் உள்ள புற ஊதா கதிர்களினால் தோல் புற்று நோய்கள் ஏற்படுகிறது கலப்பட உணவு பொருட்கள். அதிக வெப்ப நிலையில் தயார் செய்யப்பட்ட உணவு பொருட்கள் புற்று நோய்களை உருவாக்குகிறது. புகையிலை பொருட்களில் உள்ள நூற்றுக்கணக்கான வேதிப் பொருட்களும், வெற்றிலை மற்றும் பாக்கு பழக்க வழக்கங்களினாலும் புற்று நோய்கள் ஏற்படுகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்க தடுப்பூசி இருக்கா?

சுத்தமான பழக்கவழக்கங்கள், நல்ல உணவு, காய்கறி, பழங்கள், கீரை, தானியங்கள், ஆகியவற்றை சாப்பிடுவதால் எல்லா விதமான நோய்களியிருந்தும் தப்பிக்க முடியும்.

Dr.S மாரிமுத்து

மேலும் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசிகள் இப்போது வந்துவிட்டன. அதனை டாக்டர்களின் ஆலோசனையை பெற்று செலுத்திக்கொண்டால் புற்று நோய் வராமல் தடுக்கமுடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள விஷ்ணு மருத்துவமனை புற்று நோய்க்கான சிறப்பு மருத்துவமனையாகும். இந்த ஆஸ்பத்திரி கடந்த 12 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து காவிரி டெல்டா பகுதியில் மக்களின் பேராதரவை பெற்றுள்ளது.

மேலும் படிக்க: தஞ்சாவூர் மாவட்டத்தில் மறக்காமல் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்.!

இந்த மருத்துவமனையில் அதிநவின புற்றுநோய் சிகிச்சை கருவி உள்ளது. இந்த கருவியிளால் 3 டி.சி.ஆர்.டி. ஐ.எம் ஆர்.டி. போன்ற அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை முறைகளை மேற்கொள்கிறோம். மேலும் எல்லா நாட்களும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து விதமான புற்று நோய் டாக்டர்களும் ஒன்று கூடி இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிப்பதால் நேரம், பணம் மற்றும் அலைச்சல் ஆகியவை தவிர்க்கப்படு கிறது.

Dr.S மாரிமுத்து

உயர்தர புற்றுநோய் சிகிச்சை குழு:

இந்த சிகிச்சை மேற்கொள்ளும் இந்த குழுவிற்கு உயர்தர புற்றுநோய் சிகிச்சை குழு என்று அழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சை குழுவின் ஆலோசனையின் பேரில் புற அநோய் சிகிச்சையை மேற் கொள்கிறோம். இதனால் உலகத்தரமான புதிய முன்னேற்ற மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள முடிகிறது தவறான உணவு முறைகள் கைவிடுதல், இயற்கை உணவு முறைகளை எடுத்துக்கொள்ளுதல் மூலமாக நோய் களில் இருந்து தப்பிக்கலாம். புற்றுநோய்கள் நுண்ணுயிரிகளால் ஏற்படுவதால் அதனை தடுக்க தடுப்பூசிகள் வந்துவிட்டன. இந்த தடுப்பூசிகளை டாக்டர்களில் பரிந்துரையின் பேரில் செலுத்திக்கொள்ளலாம்.

இதில் முக்கியமானது எச். பி.வி. என்ற தடுப்பூசி. இந்த தடுப்பூசி கர்ப்பப்பை வாய் புற்று நோயை தடுக்கும் தடுப் பூசியாகும். இதனை பெண் கள் 9 வயதில் இருந்து 45 வயது வரை செலுத்திக் கொள்வதன் மூலம் 90 சதவீதம் புற்று நோய் வராமல் தடுக்கலாம். மேலும் 3 தவணைகளாகஇரு பாலரும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். கல்லீரல் புற்றுநோயையும் தடுப்பூசிகள் மூலம் தடுக்க லாம்.

புற்றுநோயை வெல்ல முடியும்:

நவீன மருத்துவத்தில் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்தக்கூடிய மருத்துவ முறைகள் வந்துவிட்டன. சரியான நேரத்தில் சரியான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் புற்று நோய்களை வெல்ல முடியும். புற்றுநோய் தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பே நாம் ஆரம்ப நிலையில் கண்டறிய பல்வேறு பரிசோதனைகள் இப்போது நடைமுறையில் உள்ளன. வயிறு பகுதிக்கு எண்டோஸ்கோபி, குடல் பகு திக்கு, மார்பு நோய்க்கு என ஒவ்வொன்றுக்கும் பல்வேறு பரிசோதனை முறைகள் உள் ளன. ரத்த பரிசோதனைகளால் நாம் புற்றுநோயை கண்டறிய முடியும்.

அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்காக இருக்கும் வசதிகள்:

தமிழ்நாட்டில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் முந்தைய காலத்தை விட தற்போது அதிக அளவில் புற்று நோய் சிகிச்சைக்காக தமிழ்நாடு அரசு சிறந்த மருத்துவத்தை அளித்து வருகிறது...அதே போல் விஷ்ணு மருத்துவமனையிலும் அரசின் காப்பீடு திட்டங்களை பயண்படுத்தி இலவசமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.. என்று கூறினார்.

(புற்றுநோய் குறித்தும் சிகிச்சை குறித்தும் விளக்கம் பெற  94436 01002 என்ற எண்ணில் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி புற்றுநோய் தலைமை மருத்துவர் Dr.S மாரிமுத்துவை தொடர்பு கொள்ளலாம்..)

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur