ஹோம் /தஞ்சாவூர் /

தொழில், தனி நபர், கல்வி கடன் வழங்கும் முகாம் 27ம் தேதி தஞ்சையில் நடக்கிறது

தொழில், தனி நபர், கல்வி கடன் வழங்கும் முகாம் 27ம் தேதி தஞ்சையில் நடக்கிறது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Tanjore District news | தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வரும்  27ம் தேதி (வியாழக்கிழமை) கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வரும் 27ஆம் தேதி (வியாழக்கிழமை) கடன் வழங்கும் முகாம் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிபிட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் உள்ளிட்டவைகள் சார்பாக, தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்விக்கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு முகாம் வரும் 27ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

Must Read : ஆளை மயக்கும் பேரழகு... வால்பாறை அக்காமலைக்கு செல்லும் முன் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

இதில் கடன் பெற 18 வயது முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள். சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பிட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த முகாமில் கலந்துகொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Educational Loan, Loan, Local News, Thanjavur