Home /thanjavur /

தஞ்சை மாவட்டத்தில் எந்தெந்த ஊர்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தெரியுமா?

தஞ்சை மாவட்டத்தில் எந்தெந்த ஊர்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தெரியுமா?

தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்தெந்த ஊர்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை

தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்தெந்த ஊர்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை

Tanjore BSNL 4G Services | தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்குவதாக  பிஎஸ்என்எல் நிறுவனம்  தஞ்சாவூர் வணிகப் பகுதி  பொது மேலாளர் பால. சந்திரசேனா தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
கும்பகோணம், நாகை, மயிலாடுதுறை பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில், 4ஜி சேவை அடுத்த கட்டமாக வழங்கப்படுதாக பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் தஞ்சாவூர் வணிகப் பகுதி பொது மேலாளர் பால. சந்திரசேனா தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காவிரி நதிநீா் படுகை கும்பகோணம் தொலைத் தொடர்பு மாவட்டத்தின் தொலைபேசி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பால. சந்திரசேனா பேசினார்.

இதையும் படிங்க   தஞ்சாவூர் : சுமார் 500 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் பெரும் சிக்கல்!

இக்கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை, சட்டபேரவை உறுப்பினா்கள், தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் வழங்கிய ஆலோசனைகளை ஏற்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்காலில் 4-ஜி சேவை வழங்குவற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகிறது. கும்பகோணம், நாகை , மயிலாடுதுறை பகுதிகளில் அடுத்த கட்டமாக 4-ஜி சேவை வழங்கப்படும். அக்கரைப்பேட்டை மற்றும் திருமலைராஜபுரம் ஆகிய கிராமங்களில் மத்திய அரசின் யு.எஸ்.ஓ.எப். திட்டத்தின் கீழ் 4-ஜி சேவைகள் வழங்கப்படவுள்ளது என்று பால. சந்திரசேனா தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்துக்கு நாகை தொகுதி மக்களவை உறுப்பினரும், தொலைத் தொடர்பு ஆலோசனைக் குழுத் தலைவருமான எம். செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினரும், தொலைபேசி ஆலோசனைக் குழுத் துணைத் தலைவருமான எஸ். கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், கும்பகோணம் தொகுதி சட்ட ப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், கும்பகோணம் துணை மேயா் சு.ப. தமிழழகன் உள்ளிட்டோா் ஆலோசனைகள் வழங்கினா்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முன்னதாக, துணைப் பொது மேலாளா் (நிா்வாகம்) எஸ். ராஜகுமாா் வரவேற்றாா். நிறைவாக துணைப் பொது மேலாளா் (நெட்ஒர்க்) டி. சிவசங்கரன் நன்றி கூறினாா்.
Published by:Arun
First published:

Tags: Local News, Tanjore

அடுத்த செய்தி