முகப்பு /தஞ்சாவூர் /

புத்தக பிரியர்களுக்கு குட்நியூஸ்.. தஞ்சையில் 50% தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை!

புத்தக பிரியர்களுக்கு குட்நியூஸ்.. தஞ்சையில் 50% தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை!

X
தமிழ்

தமிழ் பல்கலைக்கழகம் 

Thanjavur Tamil University | தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்திரைத் திருநாளையொட்டி 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடங்கியது.

  • Last Updated :
  • Thanjavur, India

செம்மொழியாகிய தமிழுக்கு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசால் கடந்த 1981-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது தஞ்சைப் தமிழ் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான சிறப்புகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் பல்கலைக்கழக நூலகம்.

தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகம் 1983-2022 வரை 500க்கும் மேற்பட்ட நூல்களை தமிழை அலங்கரிக்கும் வகையில் பல்கலைக்கழகம் பதிபித்து வெளியிட்டுள்ளது.

இங்கு, பொதுவாக அறிவார்ந்த நூல்களை படித்து மேம்பட ஆராய்ந்து நூல்கள் வெளியிடப்படுகிறது. சிறுவர்- முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற நூல்கள், மொழி சார்ந்த பண்பாடு சார்ந்த நூல்களும் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக அறிவியல் களஞ்சியம், வாழ்வியல் களஞ்சியம் பல பகுதிகளாக அடங்கி இருக்கின்றது.

இந்நிலையில் ஆண்டுதோறும் ஒரு சில முக்கிய நிகழ்வுகளின் சிறப்பாக தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்பு தள்ளுபடியில் நூல்கள் விற்பனை செய்யப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை திருநாளை ஒட்டி 50 சதவீத நூல்கள் விற்பனை தொடங்கியது.

இதனை தொடங்கி வைத்து பேசிய துணை வேந்தா் திருவள்ளுவன், தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் மட்டுமின்றி, தமிழ் உலகின் தலைசிறந்த ஆய்வறிஞா்களின் படைப்புகள், பழந்தமிழ் இலக்கியங்கள், அகராதி மற்றும் களஞ்சியங்கள் என பலவகை நூல்களையும் ஆழமாகப் பதிவு செய்து, அவற்றை நூலாக வெளியிடும் அரும் பணியைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறை மேற்கொண்டு வருகிறது.

நிகழாண்டு சித்திரை திருநாளையொட்டி, 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.

எனவே எனது புத்தக வாசிப்பாளர்களும் மாணவர்களும் இந்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி புத்தகத்தை பெறலாம் என தமிழ் பல்கலைக்கழகம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Book Fair, Local News, Thanjavur