முகப்பு /தஞ்சாவூர் /

கவின் - அபர்ணா தாஸ் கெமிஸ்ட்ரி படத்திற்கு பிளஸ்.. டாடா படம் குறித்து தஞ்சை மக்கள் ரிவ்யூ..

கவின் - அபர்ணா தாஸ் கெமிஸ்ட்ரி படத்திற்கு பிளஸ்.. டாடா படம் குறித்து தஞ்சை மக்கள் ரிவ்யூ..

X
டாடா

டாடா படம்

Dada Movie Review | பிக்பாஸ் பிரபலம் கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான டாடா படம் குறித்து தஞ்சை மாவட்ட ரசிகர்களின் கருத்து.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் கவின் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கி அறிமுகமாகியுள்ளார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், 'முதலும் நீ முடிவு நீ' ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ரெட் ஜேம்ஸ் மூவிஸ் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தை பற்றி தஞ்சையில் பொதுமக்களின் கருத்தை பார்க்கலாம்.

கதை சுருக்கம் :

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களான மணிகண்டனும், சிந்துவும் தற்செயலாக பெற்றோராகிறார்கள். சூழ்நிலை காரணமாக அவர்கள் பிரிக்கின்றனர், மணிகண்டன் தனது குழந்தையான ஆதித்யாவை ஒற்றை பெற்றோராக வளர்க்கும் நிர்பந்தத்துக்கு தள்ளப்படுகிறார். அதன் பிறகு அவர் சந்திக்கும் பிரச்சனை படத்தின் மீதி கதை.

டாடா

பொதுமக்களின் கருத்து :

அபர்ணா தாஸ் மற்றும் கவின் இருவருக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி படத்திற்கு பிளஸ். VTV கணேஷ், பிரதீப் ஆண்டனி இவர்களின் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக இருந்தது. லிவிங் டூ கெதரில் உள்ள ஒரு காதலர்களை பற்றிய படமாக உள்ளது. மிக அருமையாக உள்ளது என்றும், சென்டிமென்ட் சீன் நல்லாவே வொர்க் அவுட் ஆகிருக்கு. கண்டிப்பா வெற்றி பெரும் என்றும் பெரும்பாலானோர் ஒரே மாதிரியான நல்ல விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Thanjavur