முகப்பு /தஞ்சாவூர் /

பகாசூரன் படம் எப்படி இருக்கு? தஞ்சை ரசிகர்கள் சொல்வது என்ன?

பகாசூரன் படம் எப்படி இருக்கு? தஞ்சை ரசிகர்கள் சொல்வது என்ன?

X
பகாசூரன்

பகாசூரன் மூவி ரிவ்யூ

Thanjavur bakasuran movie review | மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நடித்துள்ள பகாசூரன் படம் குறித்து தஞ்சை ரசிகர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளிவந்துள்ள பகாசுரன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. அதன் திரை விமர்சனத்தையும் ரசிகர்களின் கருத்தையும் பார்க்கலாம்.

பகாசூரன் கதை சுருக்கம்:

ஒரு தெருக் கலைஞர் கொலைக் களத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர், ஆன்லைனில் நடக்கும் பாலியல் மோசடியைக் கண்காணிக்கிறார். அவர்களின் வாழ்க்கை எவ்வாறு இணைக்கப்படுகிறது மற்றும் தெரு கலைஞரரின் உண்மையான நோக்கம் என்ன என்பதே படத்தின் கதை.

இதற்கு முன்னர் மோகன்.ஜி எடுத்த படங்கள் சர்ச்சைகளை எழுப்பின. இந்தப் படத்தில் அதுபோல் இருக்கிறதா என்று பார்த்தோம் என்றால் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளையும், ஆன்லைன் விபச்சாரம் மற்றும் பெண்கள் எந்த அளவிற்கு சுரண்டப்படுகிறார்கள் என்பதை பற்றியும் எடுக்கப்பட்டுள்ளது.

ஃபாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவில், சாம். சி.எஸ் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

செல்வராகவனின் நடிப்பு படத்தைத் தக்கவைக்கும் அளவுக்கு கண்ணியமாக இருக்கிறது. அதே சமயம் நட்டியும் அதை நன்றாக நிறைவு செய்கிறார். ஆனால், படத்தில் பெண்களுக்கு மிகவும் பிற்போக்குத்தனமாக கருத்துகள் நிரம்பி வழிவதாகவும் விமர்சனம் எழுந்துவருகின்றன.

என்னது தெலுங்கு படமா? வாத்தி மூலம் மக்கள் மனதில் ரைடு வருவாரா தனுஷ்? விருதுநகர்வாசிகளின் ரிவ்யூ..

இந்தப் படம் குறித்து பேசிய ரசிகர்கள், ‘இந்த படம் யாரையும் விமர்சிக்கும் வகையில் இல்லை. பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர் அனைவரும் பார்க்க வேண்டிய படமாகவே இருக்கிறது. படம் திரில்லிங் ஆகவும் காட்சிகள் அனைத்தும் அருமையாகவும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் ஒரு சிலர் படம் நீண்ட தூரம் செல்வது போல் தெரிகிறது.

டைமிங் இன்னும் கொஞ்சம் குறைத்து இருந்தால் நல்லா இருக்கும். இசை பெரிய அளவில் ஒத்துப் போகவில்லை என்றும் கூறினார்.

First published:

Tags: Local News, Thanjavur