ஹோம் /தஞ்சாவூர் /

ஆதார் மோசடிகளைத் தவிர்க்க உடனே இதை செய்யுங்கள் - தஞ்சாவூர் மக்கள் கவனத்திற்கு...

ஆதார் மோசடிகளைத் தவிர்க்க உடனே இதை செய்யுங்கள் - தஞ்சாவூர் மக்கள் கவனத்திற்கு...

ஆதார் கார்டு

ஆதார் கார்டு

Thanjavur Latest News | தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆதார் அட்டை பெற்று 10 வருடங்கள் நிறைவடைந்தவர்கள் ஆங்காங்கே நடக்கும் முகாம்களிலும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் தங்கள் ஆதார் பதிவை திருத்திக் கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்ட மக்கள் ஆதார் கார்டு மோசடிகளைத் தவிர்க்க ஆதார் விவரங்களை புதுப்பிப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு மோசடிகளைத் தவிர்க்க குறைந்தபட்சம் 10 ஆண்டு களுக்கு ஒருமுறை, ஆதார் விவரங்களை புதுப்பிப்பது அவசியம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூறியுள்ளது.

இந்தியர்களின் முக்கிய அடையாள சான்றாக ஆதார் எண் விளங்குகிறது. மத்திய அரசு நல்வாழ்வுத் திட்டங்களில் 319 சேவைகள் உட்பட 1,100-க்கும் மேற்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் அதன் சேவைகளை வழங்க ஆதார் அடையாளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், மின் கட்டணம் உள்ளிட்ட மாநில சேவைகளுக்கும் இது முக்கியமானதாக உள்ளது.

இந்நிலையில், மோசடிகளைத் தவிர்க்க 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என யுஐடிஏஐ உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண் பெற்று 10 ஆண்டு நிறைவடைந்திருந்தால், வீட்டு முகவரி, ரேஷன் கார்டு போன்ற துணை ஆதாரங்கள் மூலம் ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆதார் அட்டை வழங்கும் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 13 ஆண்டுகளில் இதுவரை 135 கோடிக்கும் மேற்பட்டோ ருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

Must Read : சோழர்களின் வெற்றி தெய்வம்... திருச்சி உக்கிர காளியம்மன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

எனவே, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஆதார் அட்டை பெற்று 10 வருடங்கள் நிறைவடைந்தவர்கள், ஆதார் கார்டு மோசடிகளைத் தவிர்க்க ஆங்காங்கே நடக்கும் முகாம்களிலும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் தங்கள் ஆதார் பதிவை திருத்திக் கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

First published:

Tags: Aadhaar card, Local News, Thanjavur