முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சாவூரை கதைக் களமாக கொண்ட பட்டத்து அரசன்- கொண்டாடும் ஊர் மக்கள்

தஞ்சாவூரை கதைக் களமாக கொண்ட பட்டத்து அரசன்- கொண்டாடும் ஊர் மக்கள்

X
பட்டத்து

பட்டத்து அரசன்

Thanjavur | அதர்வா, ராஜ்கிரன் நடிப்பில் வெளியான பட்டத்து அரசன் படத்துக்கு தஞ்சாவூரில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

  • Last Updated :
  • Thanjavur, India

பட்டத்து அரசன் கதையின் கரு:

தஞ்சாவூர் மாவட்டம் காளையர் கோவில் எனும் ஊரில், சிறந்த கபடி ஆட்டக்காரர் என்ற பெயர் பெற்றவர் பொத்தாரி (ராஜ்கிரண்). பேரன், பேத்தி, மகன், மகள் என கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் பொத்தாரிக்கு 2 மனைவிகள். மூத்த தாரமும் அவரது மகனும் இறந்து விட, மருமகளும்(ராதிகா) பேரன் சின்னதுரையும்(அதர்வா) பழைய குடும்பத்து சண்டையினால் தனியாக வசிக்கின்றனர். அதர்வா, குடும்பத்தை ஒன்று சேர்பதற்காக எவ்வளவு போராடினாலும், சின்னதுரையை ஏற்க, பொத்தாரியின் குடும்பம் மறுக்கின்றது.

பல நாட்கள் தோற்கடிக்க முடியாத அரசகுலம் என்ற ஊரை கபடிப் போட்டியில் தோற்கடித்ததால், ஊராட்சி மன்ற தலைவரை விட பொத்தாரிக்கு ஊரில் அதிக மரியாதை. பொத்தாரியைத் தொட்டு அவரது மூன்று தலைமுறையினரும் கபடிப் போட்டியில் கொடிக்கட்டி பறப்பது, அவரது முன்னாள் நண்பருக்கு (ஊர் பிரசிடன்ட்) பிடிக்காமல் போகிறது. மகன், மகள், பேரன், பேத்தி என கூட்டுக் குடும்பமாக வாழும் பொத்தாரி, அதர்வா மற்றும் அவரது அம்மா ராதிகாவை மட்டும் குடும்பத்திலிருந்து பழைய குடும்ப பிரச்னை காரணமாக ஒதுக்கி வைக்கிறார்.

பொத்தாரியின் பேரன், செல்லையாவிற்கு புரோ கபடி போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. இது, ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சடகோபனுக்கு பிடிக்காமல் போக, தாத்தாவுடன் சேர்ந்து, சதித்திட்டம் தீட்டி பொத்தாரியின் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் அளவிற்கு செய்துவிடுகிறான். ப்ரோ கபடி போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் செல்லைய்யா இழக்கிறான்.

இதனால் மனமுடையும் செல்லைய்யா, தற்கொலை செய்து கொள்கிறான். தனது தம்பி அப்பாவி என்று நிரூபிக்க ஊரை எதிர்த்து, தன் குடும்பமே கபடி போட்டியில் போட்டியிட்டு வெற்றி பெறும் என சவால் விடுகிறார் கபடியே விளையாடத் தெரியாத ஹீரோ அதர்வா. இறுதியில் வென்றது யார்? வில்லன்களின் உண்மையான முகம் ஊர் மக்களுக்கு தெரிந்ததா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது க்ளைமேக்ஸ்.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் அருமையாக உள்ளது. கபடி போட்டியை சுற்றி கதை நகர்வது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது என்று கூறினார்.

top videos

    இந்தப் படத்தில் வரும் பொத்தாரி எனும் கதாபாத்திரம் உள்ள தஞ்சாவூர் ஆலங்குடியை சேர்ந்த உண்மையான பொத்தாரி குடும்பத்தினர் இப்படத்தை வந்து பார்த்தனர். பின்பு அவர்கள் கூறுகையில், இயக்குனர் சற்குணம் இதுபோன்று உங்கள் கதையை படமாக எடுக்க உள்ளேன் என்று கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என் அப்பா கபடி விளையாடுவதை நான் பார்த்தது இல்லை. ஆனால் திரையில் என் அப்பாவை பார்த்தது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது என கண்கலங்கி கூறினார் உண்மையான பொத்தாரி குடும்பத்தை சேர்ந்த பொத்தாரியின் மகன்.

    First published:

    Tags: Local News, Thanjavur