முகப்பு /தஞ்சாவூர் /

தமிழ்நாட்டில் முதல்முறையாக தஞ்சை அரசு பள்ளியில் வானியல் ஆய்வகம்..!

தமிழ்நாட்டில் முதல்முறையாக தஞ்சை அரசு பள்ளியில் வானியல் ஆய்வகம்..!

X
வானியல்

வானியல் ஆய்வகம் 

Thanjavur News : தமிழகத்திலேயே முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம்  மேலஉளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 921 மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்த பள்ளியில் ரூ.3.81 லட்சம் மதிப்பில் வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த ஆய்வகத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 17-ம் தேதி  திறந்து வைத்தார்.

இதில், அதிகதிறன் கொண்ட தொலைநோக்கி, கோள்களின் இயக்கங்களை துல்லியமாக கண்டறிவதற்கான அதிநவீன உபகரணங்கள், நவீன அறிதிறன் தொலைக்காட்சி, வானியல் தொடர்பான சுமார் 28-க்கும் மேற்பட்ட பொருள்கள், குரிய மண்டல அமைப்பு, கோள்கள், நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள், விண்வெளியில் சாதித்த விஞ்ஞானிகளின் வரலாறு விண்வெளி சார்ந்த புத்தகங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

மேலும் இந்த வானியல் ஆய்வகம் திறப்பு விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புத்தகத்தில் மட்டும் பார்த்த வானியல் தொடர்பான பொருட்கள் மற்றும் நிகழ்வுகளை தற்போது இந்த ஆய்வகத்தில் பார்ப்பதாலும், நுண்ணோக்கி மூலம் நேரடியாக வானியல் நிகழ்வுகளை பார்ப்பதாலும் மாணவர்கள் மிகவும் எளிமையாக பாடங்களை கற்கிறார்கள்.

இதுகுறித்து மேல உளூர் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் . “தமிழகத்தில் மேல உளூர் அரசுப் பள்ளியில்தான் முதல்முறையாக வானியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. 2-ஆவதாக கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல் நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தின் மூலம், சூரிய சந்திர கிரகணம் மற்றும் வானியல் நிகழ்வுகளை மாணவர்கள், பொதுமக்கள் என அணைவரும் நுண்ணோக்கி மூலம் கண்டு ரசிக்க முடியும்.

இதன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பத

மிகவும் எளிதாக இருக்கிறது. மேல உளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த வசதியை அமைத்து கொடுத்ததற்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்று கூறினர்.

First published:

Tags: Astronomy, Local News, Tamil News, Thanjavur