ஹோம் /தஞ்சாவூர் /

பூம்புகார் விற்பனை நிலையத்தில் விதவிதமான கிருஷ்ணர் சிலைகள்.. களை கட்டும் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் கண்காட்சி.. 

பூம்புகார் விற்பனை நிலையத்தில் விதவிதமான கிருஷ்ணர் சிலைகள்.. களை கட்டும் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் கண்காட்சி.. 

பூம்புகார்

பூம்புகார் விற்பனை நிலையம், தஞ்சாவூர்

Krishna Jayanthi 2022 : தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினை பொருள்கள் கண்காட்சி கடந்த ஆக 8 ஆம் தேதியன்று தொடங்கி  வரும் ஆகஸ்ட் 19 வரை நடைபெற உள்ளது. இதில் என்ன ஸ்பெஷல் என்பதை தற்போது காணலாம்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகாமையில் காந்திஜி சாலையில், தஞ்சை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ‘கிருஷ்ண தரிசன விழா’ என்ற பெயரில் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வரவிருக்கும் நிலையில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கைவினை பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், தங்களுடைய கலை பொருட்களை விற்பதற்கு வாய்ப்பாகவும் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

விதவிதமான கிருஷ்ணர் சிலைகள்..

இதில் கிருஷ்ணரின் பல்வேறு வடிவங்களான தவழும் கிருஷ்ணர், குழல் ஊதும் கிருஷ்ணர், ராதாகிருஷ்ணர், ஆலிலை கிருஷ்ணர் போன்றவைகளும் பஞ்சலோக, பித்தளை, கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், மண், காகித கூழ், சந்தன மரம், வெண்மரம் போன்றவற்றில் செய்யப்பட்ட கைவினை பொருட்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

கிருஷ்ணர் சிலைகள்..

இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. கிருஷ்ணரின் மண் சிலைகள் 80 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை ‌விற்பனை செய்யப்படுகிறது.

இந்த கண்காட்சியானது கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி குறித்து மேலும் தகவல்களுக்கு பூம்புகார் விற்பனை நிலையத்தை +91 94420 38155 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..

Poompuhar Handicrafts
பூம்புகார் விற்பனை நிலையம், தஞ்சாவூர்

Published by:Arun
First published:

Tags: Krishna Jayanthi, Local News, Thanjavur