ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய செயற்கை கோள்.. விண்ணில் பாய்ந்து உலா வருகிறது..

தஞ்சை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய செயற்கை கோள்.. விண்ணில் பாய்ந்து உலா வருகிறது..

தஞ்சை

தஞ்சை கல்லூரி மாணவர்கள் அசத்தல்

Tanjore District News : தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்கள் சிறிய ரக செயற்கை கோளை உருவாக்கி அசத்திய நிலையில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து உலா வருகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

இந்தியாவின் முதல் தனியார் ஏவுகணையான ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத் தின் விக்ரம்-எஸ், ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து கடந்த 18ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

இதில் நமது நாட்டை சேர்ந்த ஸ்பைஸ்கிட்ஸ் இந்தியா, என்-ஸ்பேஸ் இந்தியா மற்றும் அர்மேனியாவை சேர்ந்த பசூம்கியூ ஆகிய நிறுவனங்கள் வடிவமைத்த செயற் கைக்கோள்களை இந்த ஏவுகணை சுமந்து சென்றது.

சென்னையை சேர்ந்த ஸ்பைஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் பன்சாட் என பெயரிடப்பட்ட செயற்கைக்கோளினை விக்ரம்-எஸ் ஏவுகணை தாங்கி விண்ணில் சீறி பாய்ந்தது.

இதையும் படிங்க : சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர்களை அலறவிட்ட பாம்பு... - தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் ஏரோஸ் பேஸ் துறையை சேர்ந்த சுபிஷா, நிவேதன், அன்பு கார்த்திக், விக்னேஷ் ஆகிய இறுதியாண்டு மாணவர்களும், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறையை சேர்ந்த தேவதர்ஷினி, தீபிகா, வர்ஷா, அபிதா சசிரூபா ஆகிய இறுதியாண்டு மாணவிகளும் இந்நிறுவனத் திடம் பயிற்சி பெற்று சிறிய ரக செயற்கைக்கோளினை வடிவமைப்பதில் பங்கு கொண்டனர்.

அதன்படி இந்த மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், “கொரோனா காலத்திலிருந்து இந்த செயற்கை கோளை உருவாக்குவதற்கான பயிற்சியை மேற்கொண்டு வந்தோம். பின்னர் பயிற்சிகளை முடித்து செயற்கை கோள்களை உருவாக்கினோம். தற்போது கடந்த 18ம் தேதி விண்ணில் பாய உள்ளது என செய்தி வந்ததிலிருந்து பெறும் மகிழ்சியாக இருந்தது‌‌.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நாங்கள் செய்த செயற்கைகோள் தற்போது விண்ணில் உலா வந்து கொண்டிருப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இதேபோன்று எங்கள் கல்லூரி ஜூனியர் மாணவர்களுக்கும் நாங்கள் பயிற்சிகளை கொடுத்து பெரியார் மணியம்மை செயற்கை கோளை உருவாக்கி அனுப்பவும் வாய்ப்புகள் உள்ளது” என கூறினர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore