முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சையில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி... இங்கே இதெல்லாம் இருக்கா!

தஞ்சையில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி... இங்கே இதெல்லாம் இருக்கா!

X
கலை

கலை நிகழ்ச்சிகள் 

Thanjavur News | தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனையை எடுத்துரைக்கும் வகையில் தஞ்சாவூரில் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது

  • Last Updated :
  • Thanjavur, India

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் “ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி” என்ற தலைப்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சி வரும் மார்ச் 27-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் தமிழ்நாடு  அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய அரசு திட்டங்களின் தொகுப்பு புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளன. புகைப்பட கண்காட்சியினை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் புத்தக கண்காட்சி, உணவு திருவிழா சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இங்கே குழந்தைகள், சிறுவர்கள் கண்டு மகிழ பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. மேலும் புகைப்பட கண்காட்சி அரங்கில் தினம் தோறும் மாலை நேரத்தில் பொதுமக்களின் மனம் கவரும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

top videos

    அந்த வகையில் முதல் நாள் கண்காட்சியில் மாலையில் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, அரசு இசைப்பள்ளி பள்ளி கல்லூரி மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சி, நடைபெற்றது. தஞ்சை பழைய பேருந்து அருகே நடந்த இந்த நிகழ்ச்சியை பலர் திரண்டு வந்து நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மேலும் தொடர்ந்து மார்ச் 27ஆம்தேதி வரை நடக்க இருக்கும் இந்த புகைப்பட கண்காட்சியில் தினமும் கலை நிகழ்ச்சிகள், கவியரங்கம் ஆகியவை நடக்க இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Local News, Thanjavur