முகப்பு /தஞ்சாவூர் /

பொதுத் தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்? தஞ்சை ஆசிரியை வழங்கிய முக்கிய குறிப்புகளை கேளுங்கள்..!

பொதுத் தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்? தஞ்சை ஆசிரியை வழங்கிய முக்கிய குறிப்புகளை கேளுங்கள்..!

X
மாணவர்கள் 

மாணவர்கள் 

Thanjavur District | +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிவை பற்றி கூறுகிறார் தஞ்சை ஆசிரியர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

12ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில். விறுவிறுப்பாக மாணவர்கள் படித்து வருகின்றனர்.  தேர்வை நினைத்து பலர் பதட்டத்துடனே  உள்ளனர். மாணவர்களின் அச்சத்தை போக்குவதற்காக மாணவர்களுக்கு தஞ்சாவூர் வல்லம் அரசு மேல்நிலைப் பள்ளி உயிரியல் ஆசிரியை மதுமதி கூறிய முக்கிய கருத்துகளையும் காணலாம்.

“மாணவர்கள் தேர்வை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம். கவனமாக படிக்கவும், படித்துக் கொண்டே இருக்க வேண்டாம். இடைவெளி விட்டு படிக்கவும். இந்த நேரத்தில் படித்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் தூக்கம் வரும். அதனால், மாணவர்கள் நடந்து கொண்டே படித்தால், நல்ல ஞாபகமாக இருக்கும். உடலுக்கும் ஒரு பயிற்சி அளித்தது போலவும் இருக்கும்” என்று மாணவர்களுக்கு பல அறிவுரைகளை கூறிய நிலையில் உயிரியல் பாடம் படிக்கும் மாணவர்களுக்கு முக்கிய சில குறிப்புகளை கொடுத்தார்.

“படங்கள் வரைந்து பாகங்களை குறிப்பது, போன்ற கேள்விகள் தவறவிடாமல் எழுதவும். தெரிந்த கேள்விகளை முதலில் எழுதவும். அதேபோல் பயோ பாட்டனியிலும், பயோ ஸ்வாலஜியிலும் 19வது கேள்வி முக்கிய கேள்வியாகும். இதை தவற விடக்கூடாது” என கூறினார். இரண்டு மதிப்பெண் கேள்விகளுக்கு இரண்டு வரியில் பதிலும் மூன்று மதிப்பெண் கேள்விகளுக்கு மூன்று வரியில் பதிலும் இருந்தாலே போதுமானது. மேலும் எக்ஸாம்பிள்ஸ் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு தவறாமல் எக்ஸாம்பிள்ஸ் கொடுக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பாஸ் ஆக வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் சுவாலஜியில் முழு கவனம் செலுத்திய படித்தால் மதிப்பெண் பெறலாம். மேலும் மரபியல் பாடம், மாதவிடாய் சுழற்சி போன்ற அடிக்கடி வரக்கூடிய கேள்விகளை ஆசிரியரிடம் கேட்டு அறிந்து, அதற்கேற்றார் போல் படித்தால் பாஸ் என்பதை தாண்டி அதிக மதிப்பெண் எடுக்கலாம் என்று கூறியுள்ளார் அரசு பள்ளி ஆசிரியை மதுமதி. பொது தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது நியூஸ் 18.

First published:

Tags: Local News, Thanjavur