முகப்பு /தஞ்சாவூர் /

‘பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதினு புறக்கணிக்கிறாங்க..' தஞ்சை முள்ளுகாரத்தெருவில் இத்தனை பிரச்சனைகளா?

‘பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதினு புறக்கணிக்கிறாங்க..' தஞ்சை முள்ளுகாரத்தெருவில் இத்தனை பிரச்சனைகளா?

X
தஞ்சை

தஞ்சை

Thanjavur Municipality | தஞ்சாவூர் கீழ வாசல் அருகே உள்ள முள்ளுக்கார தெருவில் எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தரவில்லை என அப்பகுதி மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் முள்ளுக்காரத்தெருவில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியானது தஞ்சை நகராட்சியாக இருந்த போதிலும், மாநகராட்சியாக தரம் உயர்ந்தபோதிலும் எந்த கோரிக்கைகளை முன்வைத்தாலும் நிறைவேற்றாமல் அதிகாரிகள் காலம் தாழ்துகின்றனர் என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பாதாள சாக்கடை தோண்டப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. மேலும் இப்பகுதியில் இந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்குகின்றனர்.

கடந்த ஒரு வருடமாக சாலை சீரமைத்து தர வேண்டி மாநகராட்சி இடம் மனு அளிக்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு நடவடிக்கையும் இது வரை இல்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், தஞ்சையில் உள்ள மொத்த கழிவுநீரும் இப்பகுதிக்கு வந்து சேர்வதால் தேங்கிய கழிவுநிறை அகற்றுவதற்காக வடிகால் மேல் போடப்பட்ட பாலமானது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

இந்த பாலத்தின் வழியாக பள்ளி கல்லூரி மாணவிகள் வாகன ஓட்டிகள் என அனைவரும் பக்கத்தில் இருக்கும் கரந்தை பகுதிக்கு சென்று வந்தனர். தற்போது இதுவரையில் பாலம் போடப்படாததால் சுமார் 4 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி செல்வதாக இப்பவே சேர்ந்த பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் வந்து பார்வையிடுகின்றனர். செய்து தருகிறோம் என்றும் கூறுகின்றனர். ஆனால் இது வெறும் வெற்று பார்வையிடலாக மட்டுமே இருக்கிறது. எனவே இனியும் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் இப்பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Thanjavur