தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் ஆகியவற்றில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் சுகாதாரத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறன. அதன்படி மாவட்ட வாரியாக பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள 140 செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இடைநிலை சுகதாார பணியாளர்கள் உள்பட காலியாக உள்ள 140 செவிலியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும். அதோடு செவிலியர் பட்டயபடிப்பு (DGNM) அல்லது இளங்கலை நர்சிங் (B.sc Nursing) படிப்பை முடித்திருக்க வேண்டும். இது ஒப்பந்த அடிப்படையிலான பணி என்பதால் மாத சம்பளமாக ரூ.18,000 வரை வழங்கப்படும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2023/01/2023011317.pdf என்ற இந்த இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, உரிய ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றுமு் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்துக்கு ஜனவரி 30ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
விண்ணப்பங்களை நேரடியாக அல்லது தபால் மூலம் அனுப்பலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் துணை இயக்குநர், துணை இயக்கநர் சுகாதார பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, எல்.ஐ.சி. பில்டிங் அருகில், தஞ்சாவூர், 613 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சந்தேகங்களுக்க 04362 - 273503 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Must Read : குற்றால மெயின் அருவிக்கு ஒரு ஜாலி பைக் ரைட் போலாம் வாங்க..
வேலை - செவிலியர் பணி
காலிப்பணியிடங்கள் - 140
பணியிடம் - தஞ்சாவூர்
மாத சம்பளம் - 18,000
வயது வரம்பு - அதிகபட்ச வயது 50-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் - 2023 ஜனவரி 30.
மேலும் விவரங்களை https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2023/01/2023011317.pdf என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Job vacancies, Local News, Nursing, Thanjavur