Home /thanjavur /

Thanjavur | வியக்க வைக்கும் பிரம்மாண்ட நெற்களஞ்சியம்... ஆசியாவிலேயே இதுதான் மிகவும் பெரியதாம்!

Thanjavur | வியக்க வைக்கும் பிரம்மாண்ட நெற்களஞ்சியம்... ஆசியாவிலேயே இதுதான் மிகவும் பெரியதாம்!

தஞ்சாவூர் பிரம்மாண்ட நெற்கலன்

தஞ்சாவூர் பிரம்மாண்ட நெற்கலன்

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலைத்துறை கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பிரம்மாண்டமான நெற்களஞ்சியம் ஆசியாவிலேயே மிகப்பெரியது என்று போற்றப்படுகிறது. இதன் சிறப்பையும், கோவிலின் சிறற்பையும் இங்கே காண்போம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
இ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி நதி’ பாய்ந்து பொன் வளங்கொழிக்கும் திருநாடு சோழவள நாடு என்று போற்றப்படுகிறது. இந்த சோழவள நாட்டின் சிறப்பு ‘தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே’ எனும் தனிப்பாடல் ஒன்றில் சிறப்பாக போற்றிப் புகழப்பட்டுள்ளது.

பாலைவனநாதர்:

அத்தகைய சோழநாட்டில், தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 19ஆவது தலமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருப்பாலைத்துறை. இது தேவாரத்தில் குறிப்பிடப்படும் பெயர் இன்று பாபநாசம் என்று சொன்னால்தான் அனைவருக்கும் தெரியும். தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது இந்த கோவில். இந்த ஆலையத்தின் மூலஸ்தானத்தில் லிங்கமாக காட்சியளிக்கிறார் பாலைவன நாதர். நான்கு கரத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் அம்பிகை தவளவெண்ண கையாள்.

தஞ்சாவூர் நெற்கலன்


முற்காலத்தில் பாலைச்செடிகள் அடர்ந்து காணப்பட்டதால் பாலைவனம் என அழைக்கப்பட்டது. கல்வி, கேள்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய தாருகாவனத்து முனிவர்கள் இறைவனையே வெறுத்து அவரை அழிப்பதற்காக து‌‌ஷ்டவேள்வி நடத்தி, யாகத்தில் இருந்து கொடிய புலியை வரவழைத்து இறைவன் மீது ஏவினர் என்றும் இறைவன், அந்த புலியை கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

இந்த திருப்பாலைத்துறையில், காவிரியின் கிளை நதியான குடமுருட்டி பாய்கிறது. சுமார் 11 கல்வெட்டுகள் இங்கே படி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்தனை கல்வெட்டுகளும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை. இரண்டாம் இராஜராஜன், முதல் குலோத்துங்கன், விக்கிரம சோழன், மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோரின் காலத்தைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது. இந்தக் கல்வெட்டுகள் கூறும் தகவல்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தாலும், அங்கிருக்கும் இன்னொரு மிக முக்கியமான அம்சம் நம்மை கவந்திழுப்பதாக அமைந்துள்ளது.

பிரம்மாண்ட நெற்களஞ்சியம்:

அது என்னவென்றால், செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டு, அங்கே இருக்கும் மிகப்பெரிய நெற்களஞ்சியம்தான். அதன் பிரமாண்டமான தோற்றமும், அதில் நெல்லை சேகரிக்க அமைக்கப்பட்டுள்ள அதன் வாயில்களும் நம்மை வாய்பிளக்க தலையை உயர்த்திப் பார்க்க வைக்கிறது. இந்த நெற்களஞ்சியத்தில், பழைய நெல்லை பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளக் கீழே தனி திறப்புகளும், புது நெல்லை மேலே கொட்ட தனித்தனி திறப்புகளும் இருக்கின்றற. பிரம்மாண்டமான இந்த களஞ்சியத்தில் 12 ஆயிரம் கலம் நெல் சேமிக்கப்பட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய நெற்களஞ்சியம் என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலும், பிரம்மாண்ட நெற்களங்சியமும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் பார்க்க வேண்டிய இடமாகும்.

திருமணசிறப்பு:

இந்த கோவில் பிரம்மா, வி‌‌ஷ்ணு, வசி‌‌ஷ்டர், அர்ச்சுணர் ஆகியோர் வழிபட்ட தலம் எனவும், ராமபிரான், இந்த கோவிலுக்கு வந்து இத்தலத்து இறைவனை பூஜித்து சென்றதாகவும் தலவரலாறு சொல்கிறது. எழில் சூழ்ந்து காணப்படும் இந்த தலத்தில், அம்பாள் கல்யாண கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் நடைபெறும் அனைத்து திருமணங்களும் சிறப்பு பெறுகின்றன. என்றும், தம்பதியினர் அன்போடு வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி