தஞ்சாவூர் கீழவாசல் பகுதி சாலைக்கார தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை சுற்றிகாடு போல் செடிகள் வளர்ந்துள்ளன.முறையான பராமரிப்பு வசதி இல்லாததால் விஷ ஜந்துகளின்அச்சுறுத்தலால் அவதிக்குளாகி வருகின்றனர் குழந்தைகள்.
15 குழந்தைகள் படித்து வரும் இந்த அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2009 ஆம் ஆண்டு சுமார் 2.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடத்தின் வெளிப்புற சுவர்கள் சேதமடைந்தும் உள்ளன. உட்புறம் டைல்ஸ்கள் பெயந்திருப்பதால், மழைக்காலங்களில் கட்டிடத்தின் உள்ளே மழைநீர் கசிவதுமாக இருந்து வருகிறது.
மேலும் முக்கியமாக, அங்கன்வாடி மைய கட்டிடத்தை சுற்றிலும் கருவேல மரங்கள், செடி கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால் விஷ ஜீவன்களின் அச்சுறுத்தலும் இருக்கிறது.இதனால், குழந்தைகள் அவ்வபோது அவதி அடைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : மதுரை மத்திய சிறைக்கு 1000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!
இந்த அங்கன்வாடி மையத்தில் உதவியாளரானகமலிசமைக்கும் அறையிலும் பாம்பு போன்ற விஷ ஜீவன்கள் அச்சுறுத்தி வருவதாகவும், குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி கூட இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் வேதனையுடன்கூறினார். இந்த அங்கன்வாடி மையம் இப்படிஇருப்பதால் குழந்தைகளை இங்கே சேர்க்க பல பெற்றோர்கள் முன் வருவதில்லை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே ஆசிரியர்வருவதால் மீதமுள்ள நாட்களில்கமலி மட்டுமே குழந்தைகளையும் பராமரித்துவருவதாக கூறுகிறார். அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடத்தில்,ஒற்றை ஆளாககுழந்தைகளைப் பராமரிப்பது வேதனை அளிக்கிறது என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
எனவே, அங்கன்வாடி மையத்தைசுற்றிலும் உள்ள கருவேல மரங்களை அகற்றி, புதிய அங்கன்வாடி மையத்தை சீரமைத்து, கழிப்பறை வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி சேர்ந்த மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore