ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் துணிவு கொண்டாட்டம்.. நள்ளிரவில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்!!!

தஞ்சாவூரில் துணிவு கொண்டாட்டம்.. நள்ளிரவில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்!!!

X
தஞ்சையில்

தஞ்சையில் துணிவு கொண்டாட்டம்..

Thunivu Celebrations at Thanjavur | எச். வினோத் இயக்கத்தில் 3வது முறையாகஅஜித்நடித்துள்ள துணிவு படம் இன்று வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் துணிவு பட முதல் காட்சியை நள்ளிரவில் தஞ்சாவூரில் கொண்டாடினர்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்

இந்த படம் கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி ரிலீஸானது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். ‘துணிவு’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், இதன் ட்ரெய்லர் மற்றும் ‘சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா’ ஆகிய 3 பாடல்கள் வெளியானது. இந்த ட்ரெய்லர் மற்றும் ‘சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா’ ஆகிய 3 பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

துணிவு 
துணிவு கொண்டாட்டம்

இன்று படம் வெளியானதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் முதல் பட காட்சியில் கொண்டாட்டத்தில் மாஸ் காட்டியுள்ளனர் தஞ்சை ஜிவி ஸ்டூடியோவில் துணிவு படம் வெளியான நிலையில் தஞ்சையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வான வேடிக்கைகள், பட்டாசுகள், மேல தாளங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்...

ரசிகர்கள் அதிகம் கூடியதால் அப்பகுதி சுமார் மூன்று மணி நேரம் பரபரப்பாக இருந்த நிலையில் போலீசார் போதிய கட்டுப்பாடுகளை விதித்தும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிப் போனார்கள்....

First published:

Tags: Actor Ajith, Ajith, Cinema, Local News, Thanjavur, Thunivu