ஹோம் /தஞ்சாவூர் /

ஒரத்தநாடு அருகே ஆற்றுப் பாலம் இடிந்ததால் தவிக்கும் கிராம மக்கள்..

ஒரத்தநாடு அருகே ஆற்றுப் பாலம் இடிந்ததால் தவிக்கும் கிராம மக்கள்..

தஞ்சை

தஞ்சை மாவட்டம்

Thanjavur News | தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருப்பட்டிபட்டி கிராமத்தில் ஆற்று பாலம் இடிந்ததால் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கருப்பட்டிபட்டி கிராமத்தில் கல்லனை கால்வாயின் பிரிவு உளவாயல் பாசன ஆறு என சொல்லப்படும் சிறு ஆற்றில் ஆங்காங்கே பாலங்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் இப்பகுதியில் இரண்டு பாலங்கள் உள்ளன. இப்பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து வரும் நிலையில் ஆற்றை கடந்து வயலுக்கு செல்ல இப்பாலமானது பேருதவியாக இருக்கிறது.

இந்த பாலத்தின் வழியே தான் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், அறுவடை காலங்களில் ட்ராக்டர், டிப்போ சென்று வரும் நிலையில் எந்நேரமும் பிஸியாக இருக்கும் ஒரு பாலமாக இருந்து வருகிறது.

சேதமடைந்துள்ள ஆற்றுப்பாலம்

ஏற்கனவே ஒரு நடைபாலமானது முழுவதும் இடிந்தநிலையில் தற்போது இப்பகுதியில் மீதம் இருக்கும் வாகனங்கள் செல்லும் மற்றொரு பாலமும் பல இடங்களில் இடிந்து படுமோசமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் இந்தப் பாலத்தைதினந்தோரும்அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.

சேதமடைந்துள்ள ஆற்றுப்பாலம்

இப்பாலமும் இடிந்தால் விவசாயமே பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே இடிந்த பாலத்தையும், இடியும் நிலையில் உள்ள பாலத்தையும் புதிதாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur