முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / கர்நாடகாவில் பா.ஜ.கவுக்காக வேட்புமனுவைத் திரும்பப் பெற்ற அ.தி.மு.க வேட்பாளர்

கர்நாடகாவில் பா.ஜ.கவுக்காக வேட்புமனுவைத் திரும்பப் பெற்ற அ.தி.மு.க வேட்பாளர்

அதிமுக

அதிமுக

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க தரப்பு வேட்பாளர் அவரது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றார்.

  • Last Updated :
  • Karnataka, India

224 தொகுதிகளைக் கொண்ட, கர்நாடகாவில் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவுடன் அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல், ஓபிஎஸ் தரப்பில், புலிகேசி நகர், கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஈபிஎஸ் ஆதரவு பெற்ற அன்பரசனின் மனு ஏற்கப்பட்டது. இந்த தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு நிராகரிக்கப்பட்டது. எனினும் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் ஆதரவுடன் மனு தாக்கல் செய்த குமாரின் மனு அதிமுக வேட்பாளராகவும், கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜ் மனு சுயேச்சையாகவும், ஏற்கப்பட்டது. அதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளரை அ.தி.மு.க வேட்பாளராக ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டது.

12 மணி நேர வேலை மசோதா- இன்று முதல்வரைச் சந்திக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள்

top videos

    இந்தநிலையில், புலிகேசி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் களமிறங்கிய அன்பரசன் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் புலிநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அன்பரசன் வேட்புமனுவை திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க அன்பரசன் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    First published:

    Tags: ADMK, Karnataka Election 2023