ஹோம் /தஞ்சாவூர் /

சோப்பு கம்பெனி தொடங்கிய தஞ்சை கிராம பெண்கள்.. 18 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..

சோப்பு கம்பெனி தொடங்கிய தஞ்சை கிராம பெண்கள்.. 18 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..

தஞ்சை

தஞ்சை

Thanjavur District News |  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆழிவாய்கால் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இது எளிதான வெற்றியாக அமையவில்லை, அவர்களின் 18 ஆண்டுகால போராட்டத்தை தற்போது காணலாம்..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆழிவாய்கால் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் கடந்த 20 ஆண்டுகால  முயற்சியால் தற்போது அரசின் கடன் உதவி பெற்று சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

ஒரத்தநாடு அருகே உள்ள ஆழிவாய்கால் கிராமத்தில் கடந்த 2002 ஆண்டு ‌கதிரவன் மலர் சுய உதவி குழு என்ற பெயரில் மகளிர் சுய உதவி குழு தொடங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் இவர்கள் அப்பளம், ஊதுபத்தி தயாரிப்பு மீன் வளர்ப்பு போன்றவற்றை வணிக ரீதியாக செய்து வந்துள்ளனர்.

பிறகு கடந்த 2005 ஆண்டு நிரந்தரமான தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தொழில் கடன் வாங்கி தஞ்சை ஜனசேவா தொண்டு நிறுவனத்தின் வழி காட்டுதலின்படி தனியார் கம்பெனியின் சோப்புகளை தயாரிக்க தொடங்கினர். இதற்கான இயந்திரம் தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் கிடைத்தது. அன்றிலிருந்து கடந்த 20 ஆண்டுகாலமாக தனியாருக்கு சோப்புகளை தயாரித்து கொடுத்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தஞ்சை ஜனசேவா தொண்டு நிறுவனத்தின் பக்கபலத்தோடு சொந்த பிராண்டில் சோப்புகளை தயாரிக்க தொடங்கி உள்ளனர்.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் போற்றும் பழையாறை - சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

இதில் மஞ்சள், கற்றாழை, ரோஸ், சந்தனம் ஆகிய நான்கு விதமான ஹெர்பல் மூலிகை சோப்புகளை தயாரிக்கின்றனர். இதற்கு தேவையான மூலப்பொருட்களை ஆந்திர மாநிலம் குண்டூர், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் இருந்து இறக்குமதி செய்து உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்த சோப்புகள் உடலுக்கு பக்க விளைவு தராத தாவர எண்ணெய்களில் தயாரிக்கப்படும் மூலப்பொருள் தானா என பார்த்து பார்த்து வாங்கி செய்கிறோம் என்று கூறுகின்றனர். இந்த சோப்புகளின் அடக்க  விலை ₹45 ரூபாயாகும் 30 சதவீத தள்ளுபடி செய்து மொத்த விற்பனைக்கு ₹35க்கும் தருகிறார்கள்.இந்த மகளிர் சுய உதவி குழு பெண்களின் சோப்பு கம்பெனியை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் 28- தேதி தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘பொன்னி நதி பாக்கணுமே’ - தஞ்சை கல்லணையும் அங்கே அழகாய் பொங்கிவரும் காவிரியின் சிறப்பும்!

இது குறித்து மகளிர் சுய உதவி குழுவின் தலைவி சாந்தி கூறுகையில், “தனியாருக்கு சோப்புகளை தயாரித்து வந்தோம் அப்போது மூலப்பொருட்கள் அணைத்தையும், அந்த கம்பெனியே கொடுத்தது. ஒரு சோப்பிற்கு ₹1 ருபாய் எங்களுக்கு கிடைத்தது. பெரியளவில் லாபம் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து முயற்சித்தோம். அதன்‌ விளைவாக தற்போது தஞ்சை ஜன சேவா ஒத்துழைப்பில் சொந்தமாக சோப்புகளை தயாரிக்கிறோம்.

மேலும் படிக்க: தஞ்சை ராஜராஜ சோழனின் மனைவி புதைக்கப்பட்ட இடம் இதுதானா! - பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில்

மேலும் தஞ்சை மாவட்ட ஆட்சியரின் முழு ஒத்துழைப்பால் மட்டுமே இது சாத்தியமானது. மாவட்ட ஆட்சியர் பெரிய பெரிய இடங்களில் ஆர்டர்களை ஏற்படுத்தி தந்துள்ளார். மேலும் ஸ்டால் அமைத்து தருவதாகவும் கூறினார். இதனால் மாதம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் ஆட்சியர் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை எட்ட வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. மேலும் இதனால் 5,லிருந்து 10 ஆயிரம் - ருபாய் வரையிலும் மாதம் எங்களால் ஊதியம் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Tanjore, Thanjavur