ஹோம் /தஞ்சாவூர் /

நிறைவேறாமல் போன அரசு வேலை கனவு.. கூலித்தொழிலாளியாக தொடங்கி வாழை விளைச்சலில் சாதிக்கும் தஞ்சை விவசாயி.. 

நிறைவேறாமல் போன அரசு வேலை கனவு.. கூலித்தொழிலாளியாக தொடங்கி வாழை விளைச்சலில் சாதிக்கும் தஞ்சை விவசாயி.. 

வாழை

வாழை விளைச்சலில் சாதிக்கும் தஞ்சை விவசாயி

Tanjore District News : ஆண், பெண் இருபாலருக்கும் சம ஊதியம் தரும் வாழை விவசாயி.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

கூலி தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கி அரசு வேலைக்கு போக வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போன நிலையில், பல துயரங்களை கடந்து 50 ஏக்கரில் வாழை சாகுபடி செய்து 25 ஆண்டுகளாக 50 பேருக்கு அரசு வேலை போல் ஊதியத்தை அள்ளி தருகிறார் விவாசாயி மதியழகன்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்த வடுககுடியை சேர்ந்தவர் விவசாயி மதியழகன் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். மதியழகன் ஆரம்ப காலத்தில் கூலித்தொழில் செய்து வந்த நிலையில் எப்படியாவது படித்து அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியால் படித்துக்கொண்டே வேலையும் செய்து வந்துள்ளார்.

அரசு வேலை கனவு கனவாகவே போனதால், வாழையை நட்டு வாழ்க்கையையே மாற்றியுள்ளார். முதலில் 1 ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்து வந்த இவர் பின்பு வாழையின் மகத்தான மகசூலாளும் விவசாயத்தில் இவர் கற்ற நூணுக்கத்தாலும் தொடர்ந்த பெறும் முயற்சியாலும் 50 ஏக்கரில் வாழை சாகுபடி செய்து 25 ஆண்டுகளை கடந்த நிலையில் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார்.

இதையும் படிங்க : தஞ்சையில் 2 வாலிபர்களை அரிவாளால் வெட்டிய‌ 85 வயது முதியவர் கைது

இவருக்கென்றே சில தனித்துவமான கோட்பாடு உள்ளது. அதில் ஒன்று தான் தன்னிடம் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளிகளை நண்பர்கள்போல பழகுவது உதவி கேட்டாலும் கேட்காவிட்டாலும் இறங்கி வந்து செய்வது. தல அஜித் சொல்வதை போன்று “நம்ம கூட இருப்பவர்களை நாம பாத்துகிட்டா நமக்கு மேல இருப்பவன் நம்மல பாத்துபான்” போன்று தொழிலாளிகளை அந்த அளவுக்கு பார்த்துக்கொள்கிறார்.

அதற்கேற்றார்போல் ஊதியமும் ரூ.800, ரூ.900, என ஒவ்வொரு நாளும் கொடுத்து வருகிறார். இதில் ஒரு முக்கியமான சிறப்பு என்னவென்றால் ஆண், பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்குவது. எந்த கூலி தொழிலாளர்களுக்கும் ஆண், பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்குவது இல்லை. ஆனால் இதை உடைத்து காட்டி வருகிறார். விவசாயி மதியழகன்.

வாழ வைக்கும் வாழை இலை :

ஆர்கானிக் முறையில் வாழை சாகுபடி செய்து வரும் இவர் வாழை இலைகளை திருச்சி, தஞ்சாவூர், சென்னை கேரளா போன்ற பல ஊர்களுக்கு வாழை தார், வாழை இலைகளை ஏற்றுமதி செய்து வருகிறார்.

தற்போது பொங்கல் பண்டிகைக்காக சுமார் 7000 வாழைத்தார்கள் வரை அறுவடை செய்ய உள்ளார். அதில் சுமார் 5000 தார்கள் அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில் அவற்றை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளார். வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கும் இந்த வாழை தார்களை பூச்சிகள் தாக்காமல் இருக்கவும், வெடிப்புகள் இல்லாமல் இருக்கவும், பறவைகள் சேதபடுத்தாமல் இருக்கவும் தஞ்சாவூர் தோட்டக்கலையில் பாலிதீன் பையை பெற்று தார்களை சுற்றி கட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தரத்திற்கு பாராமரித்து வருகிறார்.

இந்த பையை பயண்படுத்துவதன் மூலம் வெயில் பனி படாமல் இருப்பதால் வாழைப்பழம் கெடாமல் பளப்பளப்புடன் நீண்ட நாள் இருக்கும். ஒரு தாருக்கு கூடுதலாக ரூ.70 செலவு ஆனாலும், இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது 400-க்கு விற்கும். வாழை கூடுதலாக ரூ.200-க்கு மேலும் ரூ.1000-க்கும் கூட விலை போகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதானால் இந்த முறையை பயன்படுத்தி வாழை தார்களை பராமரித்து உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார் விவசாயி மதியழகன்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore