Home /thanjavur /

Thanjavur | தலைமுடியால் கட்டி 1,400 கிலோ காரை இழுத்து 7-ம் வகுப்பு மாணவி சாதனை

Thanjavur | தலைமுடியால் கட்டி 1,400 கிலோ காரை இழுத்து 7-ம் வகுப்பு மாணவி சாதனை

தஞ்சாவூர் சிறுமி

தஞ்சாவூர் சிறுமி

Thanjavur | தஞ்சாவூரில் 1,410 கிலோ எடையுள்ள காரை தலை முடியில் கட்டி இழுத்து 7-ம் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சாதனை நிகழ்ச்சி நடந்தது, இவ்விழாவில் கராத்தே பயிற்சியாளர் இளையராஜா முன்னிலையில் மாவட்ட கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம்,  மற்றும் பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வெங்கடேசன், ஆஷா தம்பதியினரின் மகளான சம்யுக்தா (12) பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

சாதனைப் படைக்கும் சிறுமி


அவர், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இவ்விழாவில் சுமார் 1, 410 கிலோ எடையுள்ள காரைக் தனது தலைமுடியில் கட்டி, சுமார் 110 மீட்டர் தூரத்தை, 1.10 நிமிடங்களில் இழுத்துச் சென்று சாதனை படைத்தார்.

சிறுமிக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்


மாணவியை கடைவீதியில் நின்ற பொதுமக்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். மேலும் இந்த சாதனையை, வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் ஆபீஸியல் ரெக்கார்ட் உலக சாதனை நிறுவனத்தின் நடுவர் ஷெரிபா பதிவு செய்தார்.

மாணவி சம்யுக்தா இதற்கு முன் தனது பத்தாவது வயதில் 990 கிலோ எடை உள்ள காரை 112. 2 மீட்டர் தூரத்திற்கு, 1.46 நிமிடத்தில், தலைமுடியில் காரை கட்டி இழுத்துச் சென்று இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட், 8 ஆவது வயதில் ஏஷியன் புக் ஆஃப் ரெக்கார்ட் விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி