பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஒரே பொருள் அளவிலும், தரத்திலும், சொல்லப்போனால் அதன் பெயரிலும் கூட வெவ்வேறாக இருப்பதால் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள் மற்றொரு நாட்டில் பயன்படுத்தும் போது பல சிக்கல்களை உருவாக்கியது.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண, உலகம் முழுமைக்குமான பொதுவான தரத்தை (standards) உருவாக்குவதற்கான தேவை உருவானது. இதனடிப்படையில் 1987ம் ஆண்டில்உருவாக்கப்பட்டது தான் இந்த ISO தரச்சான்று.
ஏன் குழப்பம் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் உலக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு தர மேலாண்மை முறையாகும்.
கல்லூரி மாணவர்களுக்கு ISO விழிப்புணர்வு:
கேரள மாநிலத்தில் உள்ள சோமர்வேல் மருத்துவக் கல்லூரியின் முதல்வரான மருந்துவர் ஜெயராஜசேகர், தஞ்சை Bon Secours மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்களில் பங்கேற்றார். மருத்துவத்துறையில் ISO தரச்சான்று நலிவடைந்து வருகிறது. எதற்காக நலிவடைந்துது? ISO தரச்சான்று என்பது என்ன?ஆரம்ப காலத்தில் இது எப்படி இருந்தது? போன்ற ஐ.எஸ்.ஓபற்றிய விடையங்களை மாணவிகளிடம் எடுத்துரைக்கும் வகையில் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் இக்கல்லூரியில் மருத்துவத்துறையில் படித்து வரும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கு எளிதில் புரியும் வகையில் ஐஎஸ்ஓ பற்றிய முழு விளக்கங்களை சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற கருத்தரங்கத்தில் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து பேசிய மருத்துவர் ஜெயராஜ சேகர், “ISO ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது. இதனின் தாக்கமும் அதிக அளவில் இருந்தது. தற்போது NAPH, JCI சான்றிதழ்கள் இருந்தாலும் ISO என்பது முதல் புள்ளி. அதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மாணவர்கள் பல கேள்விகளை முன் வைத்தனர் அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் விவரித்தேன். இதன் மூலம் மாணவர்களுக்கு ISO தர சான்றிதழ் பற்றிய விவரங்கள் தெரிந்தது. மேலும் அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள கல்லூரியிலும் பேச உள்ளேன் என்றும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur