ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் ரூ.2.½ கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்தம்... இறுதி கட்டத்தில் கட்டுமான பணி...

தஞ்சையில் ரூ.2.½ கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்தம்... இறுதி கட்டத்தில் கட்டுமான பணி...

கார் பார்க்கிங்

கார் பார்க்கிங்

Tanjore | தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ரூ.21/2 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே ரூ.2.½கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தஞ்சை மாநகரில் மக்கள் தொகை பெருக்கத்தின் தொடர்ச்சியாக வாகனங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் பெருகியதன் காரணமாக வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்துவது என்பது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கான இடப்பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவற்றை தவிர்க்க தஞ்சை காந்திஜிசாலை, தென்கீழ் அலங்கத்தில் உள்ள வணிக வளாகம், அண்ணாசாலை ஆகியவற்றில் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களுக்கு கார்கள், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு:

ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி சாலை, தெற்கு அலங்கம் பகுதிகளிலும் கார்கள் நிறுத்தும் இடம் இல்லாததால் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லக்கூடிய நிலை உள்ளது. இதனால் வாகனங்களில்

செல்பவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கள் ஏற்படுகிறது.

இதையும் படிங்க : தஞ்சாவூரில் 1000 ஆண்டுகள் பழமையான உப்பிரிகை மண்டபம் சிதிலமடைந்து வரும் நிலையில் சீரமைக்கப்படுமா?..

இதனால் வாகன போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகிறது. சாலைகளில் நெரிசல் அதிகமாகிறது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் பல அடுக்கு வாகன நிறுத்தும் இடம் மாநகராட்சி மூலம் ஏற்படுத்த திட்டம் உருவாக்கப்பட்டது.

பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் :

தஞ்சை மாநகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே தெற்கு அலங்கம் பகுதியில் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் 56 கார்களை நிறுத்தக்கூடிய வகையில் இந்த வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பணி விரைவில் முடிவடைந்தவுடன் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "நகர வளர்ச்சி மற்றும் வாகனங்களின் பெருக்கம் போன்றவற்றினால் ஏற்படும் சாலை நெரிசல்கள் காரணமாக பல சமயங்களில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து போகும் நிலை அன்றாட நிலையாக மாறிவிட்டது. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதையும் படிங்க : சங்கீத உலகிற்கு பெயர்போன திருவையாறுக்கு பெயர் வந்தது எப்படி தெரியுமா?

இடப்பற்றாக்குறை உள்ளதால் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அவசியம். இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும். இவை பயன்பாட்டிற்கு வந்தால் ஓட்டுனர்கள் தங்கள் கார்களை நிறுத்த அங்கும், இங்குமாக அலைபாய வேண்டிய அவசியம் இருக்காது" என்றனர்.

நேரத்திற்கு ஏற்ப கட்டண வசூல் செய்யப்படும் :

நவீன ஹைட்ராலிக்ஸ் எந்திரங்களை கொண்டு இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வாகன நிறுத்துமிடத்துக்கு கார்கள் வருவதை சென்சார் கருவி பதிவு செய்யும். எவ்வளவு நேரம் கார்கள் நிறுத்தி வைக்கப்படுகிறதோ? அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். ஹைட்ராலிக்ஸ் மூலம் கார்கள், வாகன நிறுத்துமிடத்தின் மேல் தளங்களுக்கு கொண்டு செல்லப்படும். இதனால் ஒரு இடத்தில் கார்களை எல்லாம் பாதுகாப்பாக நிறுத்த முடியும். நேரத்துக்கு ஏற்ப கட்டணம் வசூல்

நவீன ஹைட்ராலிக்ஸ் எந்திரங்களை கொண்டு இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வாகன நிறுத்துமிடத்துக்கு கார்கள் வருவதை சென்சார் கருவி பதிவு செய்யும். எவ்வளவு நேரம் கார்கள் நிறுத்தி வைக்கப்படுகிறதோ? அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். ஹைட்ராலிக்ஸ் மூலம் கார்கள், வாகன நிறுத்துமிடத்தின் மேல் தளங்களுக்கு கொண்டு செல்லப்படும். இதனால் ஒரு இடத்தில் கார்களை எல்லாம் பாதுகாப்பாக நிறுத்த முடியும்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore