ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் நாட்டு நலப்பணி திட்டத்தில் மருத்துவ முகாம் நடத்திய தனியார் மருத்துவமனை!

தஞ்சையில் நாட்டு நலப்பணி திட்டத்தில் மருத்துவ முகாம் நடத்திய தனியார் மருத்துவமனை!

மருத்துவ

மருத்துவ முகாம்

Tanjore Medical Camp | பள்ளி மாணவ, மாணவிகள், மருத்துவரிடம் தனிப்பட்ட முறையிலும் ஆலோசனைகளை கேட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டத்தில் தனியார் மருத்துவமனை நடத்திய மருத்துவ முகாமில் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் பயன்பெற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆண்டுதோறும் பள்ளிகளில் நடந்து வரும் நாட்டு நலப்பணி திட்டம் கடந்த 2 வாரமாக இப்பள்ளியிலும் நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சேவைகள் செய்வதற்கு மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது.

இந்நிலையில். இப்பள்ளியில் நலப்பணி திட்டத்தின் இறுதி நாளான நேற்று தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சார்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் கருக்காடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு தங்களது உடல்களை பரிசோதனை செய்து கொண்டு உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருத்துவர் கூறிய ஆலோசனைகளை கேட்டு அறிந்தனர்.

இதையும் படிங்க : 'ஒரு லைட்டு கூட இல்ல.. இரவில் பெண்கள் பயந்துகிட்டு போறாங்க' -‌ அவதியுறும் 5 கிராம மக்கள்.. ஆற்றுக்குள் தடுமாறி விழும் அபாயம்..

மேலும் மருத்துவர் குருநாதன் அனைவரும் அறிந்து கொள்ள கூடிய அடிப்படை மருத்துவ ஆலோசனைகளை மாணவர்களுக்கு போதித்தார். பின்பு பள்ளி மாணவ, மாணவிகள், மருத்துவரிடம் தனிப்பட்ட முறையிலும் ஆலோசனைகளை கேட்டனர்.

இதுகுறித்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மருத்துவர் குருநாதன் கூறுகையில், “நாங்கள் மருத்துவமனை ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆகியது. இதுவரை 1000-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளோம். இன்னும் பல முகாம்களை நடத்த உள்ளோம்‌.

இதன் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கான வாழ்வியல் உணவு பழக்க வழக்கம், செய்ய கூடியவை செய்ய கூடாதவை என மருத்துவ ஆலோசனைகளை வழங்கினோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மேலும் அடுத்தடுத்து பல முகாம்களை நடத்த உள்ளோம்” என கூறினார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore