முகப்பு /தஞ்சாவூர் /

அம்மா வளர்த்த பசு.. தாய் இறந்த பிறகு கவலையில் வாடிய பசுவை கண்ணீருடன் தானமாக வழங்கிய மகன்கள்!

அம்மா வளர்த்த பசு.. தாய் இறந்த பிறகு கவலையில் வாடிய பசுவை கண்ணீருடன் தானமாக வழங்கிய மகன்கள்!

பசுவை தானமாக வழங்கிய மகன்கள்

பசுவை தானமாக வழங்கிய மகன்கள்

Thanjavur News | தஞ்சாவூரை சேர்ந்த ஜெயலட்சுமி வளர்த்து வந்த பசு அவர் இறந்த பிறகு கவலையில் தவித்து வந்ததால் பசுவை அவரது மகன்கள் தானமாக வழங்கியுள்ளனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த வடுகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மதியழகன் மற்றும் விஜயக்குமார். சகோதரர்களாககிய இருவரும் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த சகோதரர்களின் தாயார் ஜெயலட்சுமி அம்மாள் (78).ஜெயலட்சுமி அம்மாள் ஆசை ஆசையாக ஒரு பசு மற்றும் கன்றுக்குட்டியை வளர்த்து வந்தார். இந்தநிலையில் திடீரென ஒரு சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவால் ஜெயலட்சுமி அம்மாள் உயிரிழந்தார்.

அவர் வளர்த்து வந்த பசு மற்றும் கன்று இரண்டும் அவரை தொடர்ந்து தேடின. அவரது பிரிவால் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்தன. இந்தநிலையில் இவற்றை பராமரிப்பது சிரமமாக இருந்ததால் இதனை தானமாக கொடுக்க சகோதரர்கள் இருவரும் முடிவு செய்தனர். அதன்படி கடுவெளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இல்லத்துக்கு பசு மற்றும் கன்றுக்குட்டியை தானமாக வழங்கினார்கள்.

ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருக்கும் முதியவர்கள் பசு மாட்டிற்கு மாலை அணிவித்து கோ பூஜை செய்து வழிபட்டு கோசாலைக்கு அழைத்து சென்றனர். அப்போது சகோதரர்கள் தங்களது தாயை நினைத்து கண்ணீர் வடித்தனர். இந்த செயல் அங்கிருந்தவர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

First published:

Tags: Local News, Thanjavur